Page Loader
ஸ்னாப்ஷாட் அறிமுகம் செய்த  My AI சாட்பாட் - சிறப்புகள் என்ன?
Snapchat ChatGPT அடிப்படையில் My AI சாட்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது

ஸ்னாப்ஷாட் அறிமுகம் செய்த My AI சாட்பாட் - சிறப்புகள் என்ன?

எழுதியவர் Siranjeevi
Mar 01, 2023
10:55 am

செய்தி முன்னோட்டம்

Snapchat சோசியல் மீடியா ஆப் நிறுவனம் ஆனது, ChatGpt அடிப்படையிலான தனது சாட்போட் My AI ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாட்பாட் தற்போது சோதனை சாட்பாட் அம்சமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், AI சாட்பாட் ஆரம்பத்தில் ஸ்னாப்சாட் பிளஸ் வாடிக்கையாளர்களுக்கான பரிசோதனையாக வெளியிடப்படும். எனவே,இந்த வாரம் வெளியிடப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் சாட்போட்டின் பயன்பாட்டை மேம்படுத்த சமூக ஊடக தளம் பயனர்களின் கருத்தையும் கோரியுள்ளது. தொடர்ந்து, அவர்கள் தெரிவிக்கையில், OpenAi-யின் சாட்ஜிபிடி தொழில்நுட்பத்தின் சமீபத்திய பதிப்பில் செயல்படும் எங்கள் சோதனை AI சாட்போட் MY AI நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம். மேலும், Chatbot My AI ஆனது இந்த வாரம் தொடங்கப்படும், இப்போது கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Snapchat- ChatGPT அடிப்படையில் AI சாட்பாட் உருவாக்கம்