
AR ரஹ்மான் பாடல், "எனது அன்பான நாட்டு மக்களே!"...சுபன்ஷு ஷுக்லாவின் விண்வெளி பயணத்தின் சுவாரசிய தருணங்கள்
செய்தி முன்னோட்டம்
இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா வரலாற்று சிறப்புமிக்க ஆக்ஸியம் 4 விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக இன்று தொடங்கினார். அவர் நாளை சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைவார். இந்த நிலையில் அவரது பயணத்திற்கு சில நொடிகளுக்கு முன்னர் அவர் கேட்ட பாடல், பயணத்தின் போது அவர் பேசிய முதல் வார்த்தை உள்ளிட்ட பல சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சுபன்ஷு சுக்லாவின் ஆக்ஸியம் 4 விண்வெளிப் பயணத்தின் நாளான இன்று ஹிந்தியில் வெளியான ஷாருக்கான் நடித்த 'ஸ்வதேஷ்' திரைப்படத்தில் இருந்து ஏ.ஆர். ரஹ்மானின் இசையமைப்பில் வெளியான 'யுன் ஹி சலா' உட்பட நான்கு எழுச்சியூட்டும் பாடல்களை கேட்டார் என செய்திகள் கூறுகின்றன.
முதல் வார்த்தை
விண்ணில் ஏவப்பட்ட பிறகு சுபன்ஷு சுக்லாவின் முதல் வார்த்தைகள்
ஏவப்பட்ட உடனேயே, சுபன்ஷு சுக்லா நாட்டு மக்களுக்கு இந்தியில் உரையாற்றினார். அவர்,"எனது அன்பான நாட்டு மக்களே! என்ன ஒரு பயணம்! 41 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விண்வெளியில் திரும்பியுள்ளோம். இது ஒரு அற்புதமான பயணம். நாம் வினாடிக்கு 7.5 கிலோமீட்டர் வேகத்தில் பூமியைச் சுற்றி வருகிறோம்" என்றார். "என் தோள்களில் பொறிக்கப்பட்ட திரங்கா நான் உங்கள் அனைவருடனும் இருக்கிறேன் என்பதைச் சொல்கிறது. என்னுடைய இந்தப் பயணம் ISSற்கு ஒரு தொடக்கமல்ல, மாறாக இந்தியாவின் மனித விண்வெளித் திட்டத்திற்கு. இந்தப் பயணத்தில் நீங்கள் அனைவரும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்கள் நெஞ்சும் பெருமையால் வீங்க வேண்டும்...ஒன்றாக, இந்தியாவின் மனித விண்வெளித் திட்டத்தைத் தொடங்குவோம். ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்!"
பிரதமர் பாராட்டு
சுபன்ஷு சுக்லாவை பாராட்டிய பிரதமர் மோடி
இந்திய விமானப்படை (IAF) குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவை ஏற்றிச் சென்ற Axiom-4 விண்வெளிப் பயணத்தின் வெற்றிகரமான ஏவுதலைப் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை பாராட்டினார். "இந்தியா, ஹங்கேரி, போலந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற விண்வெளி பயணத்தின் வெற்றிகரமான ஏவுதலை நாங்கள் வரவேற்கிறோம்" என்று மோடி X இல் ஒரு பதிவில் கூறினார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல் இந்திய விண்வெளி வீரராக சுக்லா பயணித்து வருவதை எடுத்துரைத்த மோடி, "1.4 பில்லியன் இந்தியர்களின் விருப்பங்கள், நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளை அவர் தன்னுடன் கொண்டு செல்கிறார்" என்று கூறினார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
We welcome the successful launch of the Space Mission carrying astronauts from India, Hungary, Poland and the US.
— Narendra Modi (@narendramodi) June 25, 2025
The Indian Astronaut, Group Captain Shubhanshu Shukla is on the way to become the first Indian to go to International Space Station. He carries with him the wishes,…