இப்போது நீங்கள் தொடர்பு எண்ணைச் சேமிக்காமல் வாட்சப்பை பயன்படுத்தலாம்
உலகெங்கும் பல்லாயிரம் மக்கள் தினந்தோறும் பயன்படுத்தும் செயலி, வாட்சப் ஆகும். இது ஒரு இலவச செய்தி அனுப்பும் செயலி என அனைவரும் அறிந்ததே. எனினும், இந்த செயலியில் ஒரு குறுஞ்செய்தி அனுப்ப, பெறுநர் எண்ணை சேமித்தால் மட்டுமே அனுப்ப முடியும். ஆனாலும் சில நேரங்களில், பெறுநர் எண்ணை சேமிக்காமல் செய்தி அனுப்ப நேரலாம். குறிப்பாக வியாபார நிமித்தமாகவோ, அல்லது வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொள்வதற்காகவோ, அந்நபரின் எண்ணை சேமிக்க தேவையில்லை. இந்த சூழ்நிலையில் நமக்கு உதவ, வாட்சப் ஒரு புது யுக்தியை அளிக்கிறது. இதன் மூலம் செய்தி அனுப்ப வேண்டிய நபரின் எண்ணை சேமிக்க தேவை இல்லை. மாறாக, குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில, அந்நபரின் எண்ணை மட்டும் இட்டு, செய்தியை தட்டி விட்டால் போதும்.
நம்பரை சேமிக்காமல் செய்து அனுப்புவது எப்படி
பயனர்கள், ஏதேனும் ஒரு இன்டர்நெட் பிரௌசர் மூலம், வாட்ஸ்அப்பின் 'கிளிக் டு சாட்' அம்சத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எண்ணைச் சேமிக்காமலேயே மெசேஜ் அனுப்பலாம். உங்கள் இன்டர்நெட் பிரௌசரில், இந்த இணைப்பை https://wa.me/phonenumber இடவும். பெறுநரின் எண்ணில் பூஜ்யம், இடைவெளிகள் அல்லது சிறப்பு எழுத்துகளைப் பயன்படுத்த கூடாது. நாட்டின் குறியீட்டுடன் எண்ணைத் தொடங்கவும். உதாரணமாக இந்தியா எண்ணிற்கு +91 என்று தொடங்கவும். இது டெஸ்க்டாப் வாட்சப்பை பயன்படுத்துவோருக்கு உபயோகப்படும். மாற்றாக, வேறொரு செயலியின் மூலமாகவும், தொடர்பைச் சேமிக்காமல் வாட்சப்பில் செய்தியை அனுப்பலாம். க்ளிக் டு சாட், டைரக்ட் மெசேஜ் போர் வாட்ஸாப் மற்றும் ஈஸி மெசேஜ் போன்ற செயலிகள் இப்போது பிரபலமாக உள்ளன.