Loading...
ரீல்ஸ் பார்த்தாலே மாச சம்பளமா? உதய்பூர் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் விசித்திர வேலை ஆஃபர்
இன்ஸ்டாகிராம்

ரீல்ஸ் பார்த்தாலே மாச சம்பளமா? உதய்பூர் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் விசித்திர வேலை ஆஃபர்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 05, 2026
05:45 pm

செய்தி முன்னோட்டம்

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்த இன்ப்ளுயிஷ் (Influish) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், சமூக வலைதளப் பயனர்களைக் கவரும் வகையில் ஒரு புதிய வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. நாள் முழுவதும் இன்ஸ்டாகிராம் தளத்தில் நேரத்தை செலவிட்டு ரீல்ஸ்களைப் பார்த்து, அதில் எது வைரலாகிறது என்ற ட்ரெண்டுகளைக் கண்டறிவதே இந்த பணியின் முக்கிய நோக்கமாகும். டூம்ஸ்க்ரோலர் (Doomscroller) என பெயரிடப்பட்டுள்ள இந்த பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

விண்ணப்ப செயல்முறை

விண்ணப்பிக்கும் வழிமுறைகள் மற்றும் படிவத்தில் கேட்கப்படும் விவரங்கள்

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 'Gangs of Startup' என்ற இன்ஸ்டாகிராம் கணக்கின் பயோவில் கொடுக்கப்பட்டுள்ள கூகுள் ஃபார்ம் லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் தங்களது பெயர், தொலைபேசி எண், முகவரி மற்றும் தற்போதைய அல்லது எதிர்பார்க்கும் சம்பள விவரங்களைக் குறிப்பிட வேண்டும்.

மேலும் முழு நேரப் பணியா அல்லது பயிற்சிப் பணியா (Internship) என்பதையும் தேர்ந்தெடுத்து தங்களது சுயவிவரக் குறிப்பை (Resume) பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குவிந்த விண்ணப்பங்கள்

சமூக வலைத்தளங்களில் 11,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களும் எதிர்வினைகளும்

நவம்பர் 4 அன்று வெளியிடப்பட்ட இந்த புதிய வேலை அறிவிப்பு வீடியோ, இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.

இப்பணிக்கு விண்ணப்பிக்க இதுவரை 11,000-க்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்து படிவத்தைக் கோரியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் சமூக வலைதளப் பயனர்கள் பலர் "இதுதான் எனது கனவு வேலை" என்றும், "சிறந்த ஊழியர் விருதை நானே தட்டிச் செல்வேன்" என்றும் நகைச்சுவையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT