Page Loader
அதிகமாகும் இணையத்தள மோசடி - பாதுகாப்பாக இருப்பது எப்படி?
இணையத்தள மோசடியில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை

அதிகமாகும் இணையத்தள மோசடி - பாதுகாப்பாக இருப்பது எப்படி?

எழுதியவர் Siranjeevi
Apr 05, 2023
05:07 pm

செய்தி முன்னோட்டம்

நவீன காலக்கட்டத்தில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. சமீபத்தில் சைபர் மோசடி வழக்கில் போலி இணையதளத்தை பயன்படுத்தி வந்த சைபர் கும்பலைச் சேர்ந்த 6 பேரை நொய்டா போலிசார் கைது செய்தனர். இந்த கும்பலானது டி-மார்ட், பிக் பாஸ்கெட், பிக் பஜார் போன்ற பெரிய நிறுவனங்களின் போலி வலைத்தளங்களை பயன்படுத்தி தள்ளுபடிகளை அறிவித்து ஏமாற்றியுள்ளனர். அவர்களிடம் இருந்து 3 மடிக்கணினிகள், 4 செல்போன்கள், இரண்டு டெபிட் கார்டுகள், ரூ. 11,700 ரொக்கம் மற்றும் ஹூண்டாய் ஐ10 காரும் பறிக்கப்பட்டது. இப்படி பல மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருவதால், பாதுகாப்பாக எப்படி இருக்க வேண்டும்., போலியை எப்படி கண்டுப்பிடிக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

இணையத்தள பாதுகாப்பு வழிமுறைகள்

இணையத்தள மோசடி - பாதுகாப்ப இருக்க செய்ய வேண்டியவை என்ன?

பாதுகாப்பு முறைகள் முதலில் போலியான Domain இருமுறை சரிபார்க்க வேண்டும். மோசடி செய்பவர்கள் URL பெயரை சிறிது மாற்றம் செய்து இருக்கலாம். உதாரணமாக flipkart.com-க்கு பதிலாக flipkaArt.com என குறிப்பிட்டு இருக்கலாம். இல்லையெனில் .com பதிலாக orgஐ பயன்படுத்தி இருக்கலாம். அடுத்து முக்கியமாக இங்கு URL இன் உள்ள பேட் லாக் செய்யப்பட்டுள்ளதா என சரிபார்க்கவும். இவை பாதுகாப்பான இணையத்தளமா என்பதற்கான சரிபார்ப்பாகும். தொடர்ந்து சலுகைகள் வரும் போதும், லிங்க் மூலமும் பணத்தை கட்ட வேண்டாம். அவை உண்மையானதா? என்பதை சோதனை செய்ய வேண்டும். கடைசியாக எந்த ஆன்லைன் பரிமாற்றத்துக்கும் அதன் நம்பக தகுந்த செயலியை டவுன்லோட் செய்துகொண்டு அதன் மூலம் வாங்குவதே சிறந்தது. தெரியாமல் கூகுள் தேடலை நம்பி செல்ல வேண்டாம்.