SBI வாடிக்கையாளர்களின் தனிநபர் தகவல்கள் கசிவா? டார்க் வெப் எச்சரிக்கையால் அதிர்ச்சியில் எஸ்பிஐ வங்கி
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா(SBI), தனது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது. கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி, CERT-In, பாதுகாப்பு சைபர் ஏஜென்சி மற்றும் அச்சுறுத்தல் புலனாய்வு சேவை நிறுவனத்திடமிருந்து எஸ்பிஐ வங்கிக்கு எச்சரிக்கை அறிவிப்பு வந்தது. டார்க் வெப்பில் இருந்த சுமார் 3.75 லட்சம் பதிவுகளை முதற்கட்டப் பரிசீலனை செய்ததில், 3,897 எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் தனிநபர் தகவல்கள் இடம்பெற்றிருப்பது கண்டறியப்பட்டது. வாடிக்கையாளர்களின் பெயர், பாலினம், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்கள், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி, வீட்டு முகவரி, கிளை விவரங்கள், CIF எண்கள் மற்றும் கடன் தொடர்பான கோப்புகளின் தகவல்கள் இதில் அடங்கும்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JustIN | #SBI Says: Bank Received CERT-In Communication w.r.t Suspected Exposure Of Customer Data On #DarkWeb
— CNBC-TV18 (@CNBCTV18Live) October 21, 2026
🔴Prelim Analysis Identified 3.75 Lk Records Available On The Dark Web. 3,897 Customer Records Containing Personally Identifiable Information (#PII) Were Identified… https://t.co/R80iq7ZgJi pic.twitter.com/FYA7wXPaMF
நடவடிக்கை
SBI வங்கியின் பதில் நடவடிக்கைகள்
பங்குச் சந்தைகளுக்குச் சமர்ப்பித்த அறிக்கையில் எஸ்பிஐ வங்கி இந்த விவகாரத்தைக் உறுதிப்படுத்தியுள்ளதுடன், பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது:
CERT-In அமைப்பில் பதிவுபெற்ற ஒரு முன்னணி சைபர் பாதுகாப்பு நிறுவனத்தை நியமித்து, இந்தத் தரவு கசிவின் உண்மைத்தன்மை மற்றும் மூலத்தைக் கண்டறிய முழு அளவிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சைபர் சம்பவ எதிர்வினை மற்றும் தரவுப் பாதுகாப்பு நடவடிக்க உடனடியாக முடுக்கப்பட்டு நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்தத் தரவு கசிவு சம்பவத்தால் வங்கியின் முதன்மை செயல்பாடுகள், நிதி நிலைமை அல்லது வாடிக்கையாளர் சேவைகளில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்று எஸ்பிஐ தெளிவுபடுத்தியுள்ளது.
வங்கியின் வழக்கமான சேவைகள் அனைத்தும் வழக்கம்போல் தடையின்றி இயங்கி வருகின்றன.