அதிக வட்டி தரும் முக்கியமான தபால் சேமிப்பு திட்டங்கள்! இங்கே
இன்றைய காலக்கட்டத்தில் சேமிப்பு என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிவிட்டது. அதன்படி சிறிய தொகையை சேமித்து வைக்க வேண்டியது கட்டாயமான ஒன்று. இப்பதிவில், தபால் அலுவலகங்களில் பல அரசாங்க சேமிப்புத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. அவை என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம். தேசிய சேமிப்பு திட்டம் இத்திட்டமானது, பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தொடங்கலாம், திட்டத்தின் முதிர்வு 5 ஆண்டுகளாகும். ஒற்றைக்கணக்கில் அதிகப்பட்சமாக ரூ. 9 லட்சமும், கூட்டுக்கணக்கில் ரூ. 15 லட்சமும் டெபாசிட் செய்துக் கொள்ளலாம். இதற்கான வட்டி விகிதம் 7.1 சதவீதம் ஆகும்.இத்திட்டத்திற்கு குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ. 1000. அதிகபட்ச தொகை என்று அளவு கிடையாது.
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சிறப்பான சேமிப்பு திட்டங்கள்
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் முதியவர்களுக்கான இத்திட்டத்தில் தனியாகவே அல்லது மனைவியுடன் கூட்டாகவோ கணக்கைத் திறக்கலாம். 60 வயதை எட்டியவுடன் இந்த கணக்கைத் தொடங்கலாம். இதன் வட்டி விகிதம் ஜனவரி 1 முதல் மார்ச் 31, 2023 வரை 8 சதவீதமாக உள்ளது. தேசிய சேமிப்பு பத்திரம் இத்திட்டம் 18 வயதை எட்டியவுடன் இந்த கணக்கைத் தொடங்கலாம். 5 ஆண்டுகளில் முதிர்ச்சி வட்டி விகிதம் என்பது 7 சதவீதமாகும். இது பாதுகாப்பான மற்றும் ரிஸ்க் குறைவான திட்டமாக பார்க்கப்படுகிறது. சுகன்யா சம்ரித்தி யோஜனா பெண் குழந்தைகளுக்கான சேமிப்பில் குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ. 250. கணக்கு துவங்கிய நாளிலிருந்து 21 ஆண்டுகள் நிறைவடைந்ததும் கணக்கு முதிர்ச்சியடையும். வட்டி விகிதம் 7.6%.