விண்வெளிக்கு செல்லும் முதல் சவுதி அரேபிய வீராங்கனை!
சவுதி அரேபியா அரசு முதல் முறையாக பெண் விண்வெளி வீராங்கணையை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. விண்வெளிக்கு செல்லும் முதல் பெண் சவுதி அரேபியாவைச் சேர்ந்த ரயானா பர்ணாவி என்ற பெண், சக நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரர்களான, அலி அல் கர்னி உள்பட 4 பேர், AX-2 விண்வெளி பயணத்தில் இணையவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதியளித்த சவூதி அரேபிய அரசு, அடுத்த நான்கே ஆண்டுகளில் விண்வெளி பயணித்திற்கான அனுமதி வழங்கியுள்ளது. எனவே, இவர்கள் பயணிக்க உள்ள விண்கலம், அமெரிக்காவில் இருந்து ஏவப்பட உள்ளது.
விண்வெளிக்கு செல்லும் சவூதி முதல் பெண் - சவூதி அரேபியாவின் நோக்கம் என்ன?
பொருளாதாரத்தை மாற்றம் செய்யும் சவூதி சவூதி அரேபியாவில் விஷன் 2030 என்ற பெயரில் பல்வேறு நவீனமய திட்டங்களை அந்நாட்டு அரசு செயல்படுத்தி வருகிறது. நாட்டின் பொருளாதாரத்தை மறுகட்டமைப்பு செய்யவும், எண்ணெய் ஏற்றுமதியைச் சார்ந்திருக்கும் நிலையை மாற்றவும் இந்த முயற்சியில் அந்நாடு இறங்கியது. அதன் ஒரு பகுதியாக தான் இந்த விண்வெளி திட்டத்துக்கான பணிகளை தொடங்கியது. இதற்கு முன்னதாக, சவூதி அரேபியா சார்பாக 2019ஆம் ஆண்டு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியது. இதன் மூலம் விண்வெளி மனிதர்களை அனுப்பிய முதல் அரபு நாடு என்ற பெருமையையும் பெற்றிருந்தது. அதன்படியே தற்போது, விண்வெளிக்கு 4 பேரை அனுப்ப உள்ளனர். நான்கே ஆண்டுகளில் விண்வெளி பயணத்திற்கான அனுமதி வழங்கியுள்ளது தகவல் பலரின் பாராட்டை பெற்று வருகிறது.