Page Loader
குறைந்த விலையில், ஜனவரி 2023 -இல், அறிமுகம் ஆகும் சாம்சங்-இன் புதிய போன்
சாம்சங்-இன் புதிய போன்

குறைந்த விலையில், ஜனவரி 2023 -இல், அறிமுகம் ஆகும் சாம்சங்-இன் புதிய போன்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 31, 2022
06:03 pm

செய்தி முன்னோட்டம்

சாம்சங் நிறுவனம், கேலக்சி F04 ஐ, 2023 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும் அடுத்த வாரத்தில், இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தகவல்கள் கசிந்துள்ளன. சாம்சங் கேலக்சி F04, LED ப்ளாஷ் உடன், பின்புறத்தில் இரண்டு இமேஜ் சென்சார்களைக் கொண்டிருக்கும். இதன் தொடக்க விலை, ரூ.8000 -க்குள் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சில தகவல்கள், இதன் அறிமுக விலை, ரூ.7,499 இருக்கும் எனவும் யூகிக்கின்றன. எனினும், இவை அனைத்தும் அதிகாரபூர்வ தகவல்கள் இல்லை. 8GB வரை ரேம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. சமீபத்திய விவரங்களின்படி, கேலக்சி F04 , உள்கட்டமைக்கபட்ட போன் மெமரி மற்றும் மெய்நிகர் மெமரி என்று கலவையைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க

சாம்சங்-இன் புதிய போன்

மேலும், 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் டூயல் பின்புற கேமரா ஆகியவை உள்ளது. இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில், தரமான ஆக்டோ-கோர் Exynos 850 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தடையின்றி, வேகமாக உங்கள் போன்-ஐ இயக்க முடியும். மேலும், இந்த ஸ்மார்ட்போனில், ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ்-உடன் இணைந்த ஒன் யுஐ கோர் 4.1 பொருத்தப்பட்டுள்ளது. இந்த சாம்சங் ஸ்மார்ட்போன், ஊதா மற்றும் பச்சை என இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கக்கூடும்.