Page Loader
இலவச டிஸ்பிளே மாற்றும் திட்டத்தை புதிய மாடல்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது சாம்சங்
இப்போது இதே போன்ற சிக்கல்களை எதிர்கொள்ளும் Galaxy S21 மற்றும் S22 தொடர் போன்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது, சாம்சங்

இலவச டிஸ்பிளே மாற்றும் திட்டத்தை புதிய மாடல்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது சாம்சங்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 22, 2024
10:52 am

செய்தி முன்னோட்டம்

சாம்சங் அதன் இலவச டிஸ்பிளே மாற்றும் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. ஆரம்பத்தில் குறிப்பிட்ட சில கேலக்ஸி சாதனங்களை பாதித்த பச்சை கோடு சிக்கலை தீர்க்க இந்த திட்டம் தொடங்கப்பட்டது. பல ஆண்டுகளாக Super AMOLED டிஸ்ப்ளேக்கள் கொண்ட ஃபோன்களை பாதிக்கும் பச்சை கோடு பிரச்சனையினால், சாம்சங் இந்தியா உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள், ஒரு முறை இலவச டிஸ்பிளே மாற்றீட்டை வழங்கியது. ஆரம்பத்தில் Galaxy S20 மற்றும் Note 20 தொடர்களுக்கு இந்த சலுகையை வழங்கிய சாம்சங், இப்போது இதே போன்ற சிக்கல்களை எதிர்கொள்ளும் Galaxy S21 மற்றும் S22 தொடர் போன்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

கிரீன் லைன்

கிரீன் லைன் சிக்கலின் தாக்கம் மற்றும் சாம்சங்கின் ஆதரவு நடவடிக்கைகள்

பச்சைக் கோடு சிக்கல், சாதனத்தின் பயன்பாட்டினைக் கணிசமாகக் குறைக்கலாம். பயன்பாடுகளைத் தொடங்குவது போன்ற எளிய பணிகள் கூட பயனர்களுக்கு வெறுப்பூட்டும் அனுபவமாக மாற்றும். இதற்கு பதிலளிக்கும் விதமாக, சாம்சங் இலவச டிஸ்பிளே மாற்றீட்டை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இலவச பேட்டரி மற்றும் கிட் மாற்றீடுகளையும் வழங்குகிறது. இருப்பினும், இந்த சலுகைக்கு காலாவதி தேதி உள்ளது; ஏப்ரல் 30, 2024க்குள் சாம்சங் சேவை மையத்தில் பயனர்கள் தங்கள் இலவச மாற்றீடுகளை திட்டமிட வேண்டும். மறுபுறம், Galaxy S21 மற்றும் S22 தொடர்களுக்கு இன்னும் மென்பொருள் புதுப்பிப்புகள் வழங்கப்படுகின்றன. அதனால், ஒப்பீட்டளவில் புதிய வன்பொருளுடன், இந்த இலவச பழுதுபார்ப்பு செய்வதால், இந்த ஸ்மார்ட்போன்களின் ஆயுட்காலமும், பெர்ஃபார்மன்ஸ்-உம் கணிசமாக நீடிக்கும்.