Page Loader
வெளியானது 'சாம்சங் கேலக்ஸி M14 5G' ஸ்மார்ட் போன்! 
வெளியானது சாம்சங்கின் புதிய ஸ்மார்ட்போன்

வெளியானது 'சாம்சங் கேலக்ஸி M14 5G' ஸ்மார்ட் போன்! 

எழுதியவர் Prasanna Venkatesh
Apr 17, 2023
04:31 pm

செய்தி முன்னோட்டம்

சாம்சங் நிறுவனம் M சீரிஸில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது. மிட் செக்மண்டில் 15,000 ரூபாய் விலைக்குள் கேலக்ஸி M14 5G ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது சாம்சங். 90Hz ரெப்ரஷ் ரேட் கொண்ட 6.6 இன்ச் LCD டிஸ்பிளேவைக் கொண்டிருக்கிறது புதிய M14. ஸ்கிரீன் பாதுகாப்பிற்காக கொரில்லா கிளாஸ் 5 பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பின்பக்கம் 50 MP பிரதான கேமரா, 2 MP டெப்த் சென்சார் மற்றும் 2 MP மேக்ரோ சென்சார் கொடுக்கப்பட்டிருக்கிறது. முன்பக்கம் 13 MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 6,000 mAh பேட்டரியுடன் வெளியாகியிருக்கிறது இந்த புதிய கேலக்ஸி M14 5G.

கேட்ஜட்ஸ்

ப்ராசஸர் மற்றும் விலை: 

புதிய M14-ல் சாம்சங்கின் எக்சினோஸ் 1330 ப்ராசஸர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 4GB மற்றும் 6GB என இரண்டு ரேம் ஆப்ஷன்களுடனும், 128GB என்ற ஒரே ஸ்டோரேஜ் ஆப்ஷனுடனும் வெளியாகியிருக்கிறது புதிய ஸ்மார்ட்போன். ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்துடன் கிடைக்கும் இந்த மொபைலில், டூயல் சிம் ஸ்லாட், வை-பை 5, ப்ளூடூத் 5.2, 3.5mm ஜாக் மற்றும் டைப் சி சார்ஜிங் போர்ட் ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கின்றன. 4 GB/128 GB மாடலின் விலை ரூ.13,490-ஆகவும், 6 GB/128 GB மாடலின் விலை ரூ.14,990-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 முதல் அமேசான் மற்றும் சாம்சங்கின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் இந்த போனை வாங்கிக் கொள்ளலாம். சாம்சங்கின் சில்லறை விற்பனைக் கடைகளிலும் இந்தப் போனை வாங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.