கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் கேலக்ஸி வாட்ச் சீரிஸ் 6 ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகப்படுத்தியது சாம்சங்
செய்தி முன்னோட்டம்
சாம்சங் ரசிகர்களுடன் ஆவளுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த கேல்கஸி அன்பேக்டு நிகழ்வு நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்த நிகழ்வில், எதிர்பார்த்ததைப் போலவே ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் மற்றும் டேப்லட் எனப் பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது சாம்சங்.
இன்றைய கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் கேலக்ஸி வாட்ச் 6 மற்றும் கேலக்ஸி வாட்ச் 6 கிளாஸிக் ஆகிய இரண்டு கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது சாம்சங்.
வாட்ச் 6 ஆனது 40மிமீ மற்றும் 44மிமீ ஆகிய இரண்டு அளவுகளிலும், வாட்ச் 6 கிளாஸிக் ஆனது 43மிமீ மற்றும் 47மிமீ ஆகிய இரண்டு அளவுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
இரண்டு ஸ்மார்ட்வாட்ச்களிலும் எக்ஸினோஸ் W930 சிப்பையே பயன்படுத்தியிருக்கிறது சாம்சங். மேலும், 2GB ரேம் மற்றும் 16GB ஸ்டோரேஜ் வசதியுடன் வெளியாகியிருக்கின்றன இந்த ஸ்மார்ட்வாட்ச்கள்.
சாம்சங்
என்னென்ன வசதிகளுடன் வெளியாகியிருக்கிறது வாட்ச் 6 சீரிஸ்:
ஆல்வேஸ் ஆன் வசதியுடன் 30 மணி நேரம், ஆல்வேஸ் ஆன் வசதி இல்லாமல் 40 மணி நேரமும் தாக்குப்பிடிக்கும் அளவிற்கான பேட்டரியை இரண்டு ஸ்மார்வாட்ச் மாடல்களிலும் அளித்திருக்கிறது சாம்சங்.
மேம்படுத்தப்பட்ட ஸ்லீம் அனாலிசிஸ், AFib பயன்பாட்டிற்கான சப்போர்ட் மற்றும் மேம்படுத்தப்பட்ட இதயத் துடிப்பு கண்காணிப்பு வசதிகளை புதிய ஸ்மார்ட்வாட்ச்களில் கொடுத்திருக்கிறது சாம்சங்.
மேற்கூறிய உடல்நல வசதிகளைத் தவிர்த்து இன்னும் பல புதிய உடம்நலம் சார்ந்த வசதிகளையும் இந்த ஸ்மார்ட்வாட்ச் சீரிஸில் கொடுத்திருக்கிறது சாம்சங். மேலும், மிகவும் மெல்லிய பெசல்களுடன், வெளிச்சமான டிஸ்பிளேக்கள் இந்த ஸ்மார்ட்வாட்ச்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
கூகுளின் வியர் OS 4 பயன்படுத்தப்பட்டிருக்கும் வாட்ச் 6 மாடலை $299 விலையிலும், வாட்ச் 6 கிளாஸிக் மாடலை $399 விலையிலும் வெளியிட்டிருக்கிறது சாம்சங்.