ரோபோட்டுக்கு உணர்ச்சியை வழங்கிய விஞ்ஞானிகள்; மனித குலத்துக்கு ஆபத்தா?
இஸ்ரேலில், உள்ள டெல் ஆவிவ் யுனிவர்சிட்டி என்ற பல்கலைக்கழகத்தில் உள்ள விஞ்ஞானிகள், உலகத்தில் முதல் முறையாக வாசனைகளை முகர்ந்து பார்த்து உணரக் கூடிய ரோபோட்டை உருவாக்கி அசத்தியுள்ளனர். கேட்பதற்கே வேடிக்கையாக உள்ளதா? ஆம் இவர்கள் உருவாக்கிய இந்த ரோபோட்கள் 10 ஆயிரம் மடங்கு அதிகமாக வாசனை திறன் கொண்டவை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ரோபோட்டிற்கு 'பயோ-ஹைபிரிட் ரோபோட்' என பெயரிட்டுள்ளனர். இதற்கு காரணம் வெட்டுக்கிளியின் ஆண்டனாவின் உதவியுடன், எலக்ட்ரிக் நோடில் கனெக்ட் செய்யப்பட்டுள்ளன. இந்த ரோபோட்டின் எலக்ட்ரிகல் சிஸ்டம், வாசனைகளை ஆண்டனா மூலம் நுகர்ந்து அது என்ன பொருள் என்பதை அடையாளம் காண்கிறது.
ரோபோவுக்கு உணர்ச்சியை வழங்கி விஞ்ஞானிகள் - மனிதனுக்கு ஆபத்தை உண்டாகுமா?
இதற்காகவே இந்த ரோபோவிற்கு பல விதமான வாசனை பற்றிய தகவல்கள் புகுத்தப்பட்டுள்ளன. இதுவரை இந்த ரோபோ 8 விதமான வாசனை பொருட்களை அடையாளம் கண்டுள்ளதாம். அதேபோன்று, இந்த ரோபோட் முன் இரண்டு விதமான வாசனைகளை விஞ்ஞானிகள் கலந்த போதிலும், இது அவற்றை தனித்தனியாக அடையாளம் காண்டுள்ளது. விஞ்ஞானிகளின் இந்த புதிய முயற்சி உண்மையிலே நம்மை வியக்க வைக்கிறது. அதுமட்டுமின்றி இனி வரும் காலங்களில் ரோபோகளுக்கு உணரும் திறன், டச் திறன், சைட் திறன் போன்ற பல உணர்ச்சி திறன்களை விஞ்ஞானிகள் கற்பிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். இது எல்லாம் சாத்தியம் ஆனால் மனிதனின் நிலையை நினைத்து பாருங்கள்.....