எப்படி இருக்கிறது ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ்?: ரிவ்யூ
விலை குறைந்த சிறந்த ஏர்பட்ஸ்களை அறிமுகப்படுத்துவதில் ரெட்மி மற்றும் ரியல்மி நிறுவனங்களுக்கு இடையே தான் போட்டி. தற்போது புதிதாக விலை குறைந்த ஏர்பட்ஸ் ஒன்றை வெளியிட்டிருக்கிறது ரெட்மி. ரூ.1,399 விலையில் வெளியாகியிருக்கும் 'ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ்' எப்படி இருக்கிறது? பார்க்கலாம். டிசைன்: 41.2கி எடையுடன் பெப்பில் வடிவ டிசைனைக் கொண்டிருக்கிறது பட்ஸ் 4-ன் கேஸ். ஒவ்வொரு ஏர்பட்டும் 3.6கி என்ற குறைவான எடையைக் கொண்டிருக்கின்றன. எனவே, நீண்ட நேரம் பயன்படுத்தினாலும் எதுவும் தெரியவில்லை. பல அளவுகளில் சிலிக்கான் டிப்களைக் கொடுத்திருப்பதால் காதுகளில் நன்றாக நின்று கொள்கின்றன இந்த ஏர்பட்ஸ்கள். இந்த ஏர்பட்ஸ் IPX4 ரேட்டிங்குடன் வருவது கூடுதல் சிறப்பு. ஓட்டப்பயிற்சி, நடைப்பயிற்சியின் போதும் ஏர்பட்ஸ்கள் கீழே விழவில்லை.
பயன்பாட்டு அனுபவம்:
கூகுள் ஃபாஸ்ட் பேர் வசதியைக் கொண்டிருப்பதால், ஒரு முறை பேர் செய்தவுடன் மறுமுறை நாம் கேஸில் இருந்து எடுத்தவுடன் தானாகவே கனெக்ட் ஆகிவிடுகிறது. ப்ளூடூத் 5.3 தொழில்நுட்பம் இருப்பதால், கனெக்ஷன் எந்தப் பிரச்சினையுமின்றி ஸ்டேபிளாக இருக்கிறது. டச் கன்ட்ரோல் வசதிகளும் இந்த ஏர்பட்ஸில் அளிக்கப்பட்டிருக்கிறது. ப்ளே/பாஸ் செய்ய மற்றும் கால்களை அட்டெண்டு செய்ய மற்றும் கட் செய்ய இருமுறை டேப் செய்தால் போதும். பெர்ஃபாமன்ஸ்: இந்த விலைக்கேற்ற நல்ல பெர்ஃபாமன்ஸையே கொண்டிருக்கிறது இந்த பட்ஸ் 4 ஆக்டிவ். இந்த பட்ஸில் பேஸிவ் நாய்ஸ் கேன்சலேஷன் சிறப்பாக வேலை செய்கிறது. தெளிவான மற்றும் கிரிஸ்பியான ஒலி அனுபவத்தைக் கொடுக்கிறது இந்த பட்ஸ் 4. கால்கள் பேசும் போதும் எந்தப் பிரச்சினையும் இல்லை.