ரியல்மீ நார்சோ N53.. எப்படி இருக்கிறது?: ரிவ்யூ
செய்தி முன்னோட்டம்
தங்களுடைய புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான நார்சோ N53-ஐ வெளியிட்டிருக்கிறது ரியல்மீ. நார்சோ N55-வை விட கொஞ்சம் குறைவான விலையில் வெளியாகியிருக்கிறது N53. இதன் விற்பனை நாளை தொடங்குகிறது. சரி, இந்த மொபைல் பயன்பாட்டுக்கு எப்படி இருக்கிறது?
வசதிகள்:
6.74 இன்ச் IPS LCD டிஸ்பிளே
யுனிசாக் T612 4G ப்ராசஸர்
50MP+2MP ரியர் கேமரா: 8MP செல்ஃபி கேமரா
5000 mAh பேட்டரி
33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
பக்கவாட்டு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்கள்
ஆண்ட்ராய்டு 13
விலை:
4 GB ரேம் + 64 GB ஸ்டோரேஜ் - ரூ.8,999
6 GB ரேம் + 128 GB ஸ்டோரேஜ் - ரூ.10,999
மொபைல் ரிவ்யூ
பயன்பாட்டிற்கு எப்படி இருக்கிறது?
பட்ஜெட் விலையில் சிறப்பான வசதிகளுடன் ஸ்மார்ட்போன்களை வெளியிடுவது தான் ரியல்மீயின் ஸ்பெஷல். இந்த மொபைலிலும் அதனையே பின்பற்ற முயற்சி செய்திருக்கிறது ரியல்மீ.
7.49மிமி அளவில் மிகவும் ஸ்லிம்மான போனாக இதனை தயாரித்திருக்கிறது ரியல்மீ. டிசைனும் பார்த்தவுடன் கவரும் வகையில் இருக்கிறது.
ப்ராசஸர் பெர்ஃபாமன்ஸ் ஓகே. இந்த செக்மண்டில் வைத்துப் பார்த்தாலும் ஓகேவான பெர்ஃபாமன்ஸ் தான். பேட்டரி பெர்ஃபாமன்ஸ் சூப்பர். நீண்ட பயன்பாட்டிலும் ஒரு நாளுக்கு மேல் தாக்குப்பிடிக்கிறது.
கேமரா பெர்ஃபாமன்ஸூம் ஓகே தான். எனினும், பட்ஜெட் செக்மண்டில் பிற மொபைல்களுடன் ஒப்பிடும் போது நல்ல கேமரா பெர்ஃபாமன்ஸ் தான்.
5G வசதி இல்லாதது மைனஸ். பட்ஜெட் செக்மண்டில் இது ஓகேவான ஸ்மார்ட்போன் தான். எனினும், பரிந்துரை செய்யும் அளவிற்கு நல்ல பெர்ஃபாமன்ஸைக் கொடுக்கவில்லை.