Page Loader
2022 இல் வழக்கொழிந்து போன சில பிரபலமான கேட்ஜெட்களும், விரைவில் விடைபெற இருப்பவைகளும்
நம்மை விட்டு சென்ற சில பிரபலமான கேட்ஜெட்கள்

2022 இல் வழக்கொழிந்து போன சில பிரபலமான கேட்ஜெட்களும், விரைவில் விடைபெற இருப்பவைகளும்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 28, 2022
12:08 pm

செய்தி முன்னோட்டம்

தொழில்நுட்ப உலகில் மாற்றங்களை தவிர்க்கவே முடியாது. புதிய செயலிகள், கேட்டக வரவும், அப்டேட் செய்ய முடியாத, மக்களிடையே பெரிதாக வரவேற்பு பெறாத கேட்ஜட்கள் நிறுத்தப்படுவதும் இயல்புதான். அதில் இந்த ஆண்டு வழக்கொழிந்து போனவை பற்றிய பட்டியல் இங்கே. கூகிள் ஹேங்கவுட்: பிரபலமான இந்த சாட் செயலி, சென்ற நவம்பர் மாதம் மூடப்பட்டது. வாட்சப், ஸ்லாக் போன்ற செயலிகள் மார்க்கெட்டில் போட்டியிட வந்துவிட்டன. ஸ்டேடியா: கூகிளின் மற்றொரு சேவையான ஸ்டேடியாவும் மூடப்படவுள்ளது. இது நிறுவனத்தின் மிகவும் பிரபலமான கிளவுட் கேமிங் சேவையாகும். நவம்பர் 2019 இல் ஸ்டேடியாவை அறிமுகப்படுத்தியது. தற்போது, ஜனவரி 18 ஆம் தேதி வரை இதை உபயோகிக்கலாம்.

மேலும் படிக்க

நம்மை விட்டு சென்ற சில பிரபலமான கேட்ஜெட்கள்

மெட்டா போர்ட்டல் ஸ்மார்ட் டிஸ்ப்ளே: அமேசான் எக்கோ, கூகிள் நெஸ்ட் ஆகியவற்றிற்கு போட்டியாக வந்த இந்த, போர்ட்டல் ஸ்மார்ட் டிஸ்ப்ளே, விடைபெற்றுள்ளது. மேலும் மெட்டா நிறுவனம் தற்போது, மெட்டாவேர்ஸில் கவனம் செலுத்துவதால், இதன் முக்கியத்துவத்தை இழந்தது. மெட்டாவின் புல்லட்டின்: விரைவில் இந்த செயலி மூடப்படும் என கணிக்கப்படுகிறது. சப்ஸ்டாக் போன்றவற்றுக்கு போட்டியாக, மெட்டா நிறுவனம், 2021 இல் புல்லட்டினை அறிமுகப்படுத்தியது. மார்ச் 2023 இல் புல்லட்டின் முழுமையாக நிறுத்தப்படும். அமேசான் க்ளோ: சிறுவர்களை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்ட சாதனம். தொலைதூர நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்புகொள்வதை எளிதாக்கும் சாதனமாக வந்தது. இதன் விலையும், இதன் வீழ்ச்சிக்கு ஒரு காரணம். டிசம்பர் 31 முதல் இந்த சாதனத்தை நிறுத்த முடிவு செய்துள்ளது, அமேசான்.