LOADING...
செப்டம்பர் 21 அன்று இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்; இந்தியாவில் தெரியுமா?
செப்டம்பர் 21 அன்று இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்

செப்டம்பர் 21 அன்று இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்; இந்தியாவில் தெரியுமா?

எழுதியவர் Sekar Chinnappan
Sep 15, 2025
08:17 pm

செய்தி முன்னோட்டம்

2025 ஆம் ஆண்டின் கடைசிச் சூரிய கிரகணம் செப்டம்பர் 21 அன்று நிகழ உள்ளது. இந்த நிகழ்வு, பகுதிச் சூரிய கிரகணம் என்பதால், சந்திரன் சூரியனின் ஒரு பகுதியை மட்டுமே மறைக்கும். இது, முக்கியமாகத் தெற்கு அரைக்கோளத்தில் உள்ள பார்வையாளர்களுக்குத் தெரியும். ஒருங்கிணைந்த உலக நேரப்படி இந்த கிரகணம் 17:29 மணிக்குத் தொடங்கி, 19:41 மணிக்கு உச்சத்தை அடையும், பின்னர் 21:53 மணிக்கு முடிவடையும். இந்த கிரகணம், இந்தியாவில் தெரியாது, ஏனெனில் இது இரவு நேரங்களில் நிகழ்கிறது. இந்திய நேரப்படி, இந்த நிகழ்வு செப்டம்பர் 21 அன்று இரவு 10:59 மணியிலிருந்து, செப்டம்பர் 22 அன்று அதிகாலை 3:23 மணி வரை நீடிக்கும்.

எங்கு தெரியும்?

சூரிய கிரகணம் எங்கு தெரியும்?

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அண்டார்டிகா மற்றும் பல பசிபிக் தீவுகளில் உள்ள மக்கள் இதனைப் பார்க்க முடியும். இந்தக் கிரகணம் பல காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறுகிறது. இது, இரவும் பகலும் சமமாக இருக்கும் செப்டம்பர் ஈக்வினாக்ஸிற்கு அருகில் நிகழ்கிறது. இந்து நாட்காட்டியின்படி, இது பித்ரு பக்‌ஷா காலத்தில் நிகழ்ந்தாலும், இந்தியாவில் தெரியாததால், பாரம்பரிய சடங்குகள் எதுவும் கடைபிடிக்கப்படாது. கிரகணத்தைப் பார்க்கக்கூடிய பகுதிகளில் உள்ளவர்களுக்கு, பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி நிபுணர்கள் நினைவூட்டுகின்றனர். சூரியனை நேரடியாகப் பார்ப்பது கண்களுக்கு நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே, இதற்கென வடிவமைக்கப்பட்ட சூரிய கிரகண கண்ணாடிகள் அல்லது சான்றளிக்கப்பட்ட வடிகட்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.