LOADING...
சமூக ஊடகங்களில் KYC கட்டாயம்? ஆன்லைன் பாதுகாப்பை உறுதி செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை
பயனர்களுக்கு KYC கட்டாயமாக்க வேண்டும் என நாடாளுமன்றக் குழு பரிந்துரை

சமூக ஊடகங்களில் KYC கட்டாயம்? ஆன்லைன் பாதுகாப்பை உறுதி செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை

எழுதியவர் Venkatalakshmi V
Mar 24, 2026
01:52 pm

செய்தி முன்னோட்டம்

சமூக ஊடகங்கள், டேட்டிங் செயலிகள் மற்றும் ஆன்லைன் கேமிங் தளங்களில் அதிகரித்து வரும் போலி கணக்குகள் மற்றும் சைபர் குற்றங்களைத் தடுக்க, பயனர்களுக்கு KYC கட்டாயமாக்க வேண்டும் என நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. இந்தத் திட்டம் ஆன்லைன் பாதுகாப்பை அதிகரிக்கும் என்று ஒருபுறம் கூறப்பட்டாலும், மறுபுறம் இது மக்களின் 'தனிப்பட்ட தரவு பாதுகாப்பு' மற்றும் 'கண்காணிப்பு' குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதிகாரப்பூர்வ அடையாளச் சான்றுகள் இல்லாத பயனர்கள் இதனால் இணைய சேவைகளைப் பெறுவதில் சிக்கல் எழலாம் என விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும், இணைய உலகில் அதிகரித்து வரும் குற்றங்களைத் தடுக்க இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் அவசியம் என்பதே இந்தக் குழுவின் கருத்தாக உள்ளது.

பரிந்துரை

நாடாளுமன்ற குழுவின் முக்கியப் பரிந்துரைகள்

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து ஆய்வு செய்த நாடாளுமன்றக் குழு, தனது அறிக்கையில் பின்வரும் முக்கிய அம்சங்களைக் குறிப்பிட்டுள்ளது. 1. போலி கணக்குகள் மூலம் நடக்கும் ஆள்மாறாட்டம் மற்றும் அநாமதேயத் தொல்லைகளைக் குறைக்க, அரசு அங்கீகரித்த ஆவணங்கள் மூலம் பயனர்களின் அடையாளத்தை (KYC) உறுதி செய்ய வேண்டும். 2. சிறுவர்கள் வயதுக்கு மீறிய உள்ளடக்கங்களைப் பார்ப்பதைத் தவிர்க்கவும், ஆன்லைன் விளையாட்டுகளில் அவர்களைப் பாதுகாக்கவும் கடுமையான வயது சரிபார்ப்பு முறைகளைச் செயல்படுத்த வேண்டும். 3. பெண்கள் மற்றும் சிறுமிகளைப் பாதுகாக்கத் தவறும் நிறுவனங்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்பட வேண்டும். 4. ஆன்லைன் Trolling, மிரட்டல்கள் மற்றும் அடையாளத் திருட்டு போன்றவற்றைக் கட்டுப்படுத்த விரைவான புகார் தீர்க்கும் அமைப்பை உருவாக்க வேண்டும்.

Advertisement