NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / பைட்டான்ஸூக்கு சாட்ஜிபிடி சேவைப் பயன்பாட்டைத் தடை செய்த ஓபன்ஏஐ, ஏன்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    பைட்டான்ஸூக்கு சாட்ஜிபிடி சேவைப் பயன்பாட்டைத் தடை செய்த ஓபன்ஏஐ, ஏன்?
    பைட்டான்ஸூக்கு சாட்ஜிபிடி சேவைப் பயன்பாட்டைத் தடை செய்த ஓபன்ஏஐ

    பைட்டான்ஸூக்கு சாட்ஜிபிடி சேவைப் பயன்பாட்டைத் தடை செய்த ஓபன்ஏஐ, ஏன்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Dec 19, 2023
    12:15 pm

    செய்தி முன்னோட்டம்

    ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி செயற்கை நுண்ணறிவு சாட்பாட் சேவையை பொதுப் பயனாளர்கள் மட்டுமின்றி நிறுவனங்கள் பலவும் பயன்படுத்தி வருகின்றன.

    இந்நிலையில், ஓபன்ஏஐயின் சேவையின் மூலம் கிடைத்த தகவல்களைக் கொண்டு சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் நிறுவனம், தங்களுடைய சொந்த செயற்கை நுண்ணறிவு மாடல் ஒன்றை உருவாக்கப் பயன்படுத்தியிருப்பதாகக் குற்றம் சாட்டியிருக்கிறது ஓபன்ஏஐ நிறுவனம்.

    மேலும், குற்றம் சாட்டியதோடு மட்டுமல்லாமல், தங்கள் சேவைகளை பைட்டான்ஸ் நிறுவனம் பயன்படுத்துவதை தற்காலிகமாக தடையும் செய்திருக்கிறது ஓபன்ஏஐ.

    டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்ஸின் நடவடிக்கைகளானது, தங்களது பயன்பாட்டு விதிமுறைகள் மீறும் வகையில் இருப்பதாகக் கூறியிருக்கிறார் ஓபன்ஏஐ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் நிகோ ஃபெலிக்ஸ்.

    சாட்ஜிபிடி

    குற்றச்சாட்டை மறுக்கும் பைட்டான்ஸ்: 

    ஓபன்ஏஐயின் API சேவையைக் கொண்டு ஒரு AI மாடலை தொடக்கத்தில் சிறிய அளவில் பரிசோதனை பார்த்தது உண்மை தான் என சீன பத்திரிகை ஒன்றிடம் தெரிவித்திருக்கும் பைட்டான்ஸ், கடந்த ஏப்ரல் மாதமே அந்த நடவடிக்கைகளை நிறுத்தி விட்டதாகத் தெரிவித்திருக்கிறது.

    மேலும், ஓபன்ஏஐயின் குற்றச்சாட்டை மறுத்திருக்கும் அந்நிறுனம், ஓபன்ஏஐயின் பயன்பாட்டு விதிமுறைகளை மீறும் வகையில் தாங்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்திருக்கிறது.

    இந்த விஷயத்தில் மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும் என தெரிவித்திருக்கிறது ஓபன்ஏஐ. ஏற்கனவே பல்வேறு புகார்களில் பைட்டானஸின் பெயர் தவறான காரணங்களுக்காக அடிபடும் நிலையில், இந்தக் குற்றச்சாட்டு அமெரிக்காவின் அதன் வணிகத்தை மேற்கொள்வதில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஓபன்ஏஐ
    சாட்ஜிபிடி
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    தனது மூன்று விமானப்படை தளங்கள் மீது இந்தியா 'ஏவுகணை தாக்குதல்' நடத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு பாகிஸ்தான்
    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்தி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்

    ஓபன்ஏஐ

    மூன்று நாட்களில் மூன்று சிஇஓ மாற்றம்; குளறுபடிகளால் நிறைந்த ஓபன்ஏஐயில் என்ன நடக்கிறது? தொழில்நுட்பம்
    5 நாட்களுக்குள் மீண்டும் ஓபன்ஏஐயின் CEO ஆனார் சாம் ஆல்ட்மேன் செயற்கை நுண்ணறிவு
    சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் சாம் ஆல்ட்மேனை வைத்து 'நம்ம யாத்ரி' விளம்பர நோட்டிஃபிகேஷன் பெங்களூர்
    மனிதகுலத்திற்கே அச்சுறுத்தல்.. ஓபன்ஏஐயின் புதிய ரகசிய தொழில்நுட்பம் குறித்து வெளிவந்த தகவல்கள்  தொழில்நுட்பம்

    சாட்ஜிபிடி

    AI-யின் வளர்ச்சி.. சுருங்குகின்றனவா பெருநிறுவனங்கள்?  செயற்கை நுண்ணறிவு
    AI-க்களால் உருவாகும் ஆபத்து.. எச்சரிக்கிறார் AI தொழில்நுட்பத்தின் தந்தை! செயற்கை நுண்ணறிவு
    ப்ளக்இன் மூலம் சாட்ஜிபிடியில் ரியல் எஸ்டேட் சேவை வழங்கும் அமெரிக்க நிறுவனம்! செயற்கை நுண்ணறிவு
    ஆன்லைன் கல்வி நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் சாட்ஜிபிடி! செயற்கை நுண்ணறிவு

    தொழில்நுட்பம்

    ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ பதிவு - மத்திய அரசு எச்சரிக்கை  சினிமா
    உலகளவில் இந்தியாவில் தான் காசநோய் பாதிப்பு அதிகம்: உலக சுகாதார அமைப்பு இந்தியா
    அமெரிக்காவில் வெளியானது ஹ்யூமேன் நிறுவனத்தின் புதிய சாதனமான 'AI பின்' கேட்ஜட்ஸ்
    டிசம்பர் 1 தொடங்கி பயன்பாடற்ற கணக்குகளை நீக்கத் திட்டமிட்டிருக்கும் கூகுள் கூகுள்

    தொழில்நுட்பம்

    கேரளாவின் முதல் டீப் ஃபேக் டெக்னாலஜி வழக்குப்பதிவு, ஒருவர் கைது - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    சிறிய ஆன்லைன் தளங்களில் தீவிரவாத உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்த புதிய கருவி: கூகுள் கூகுள்
    உணவில் உள்ள பூச்சிகளை உடனடியாக கண்டறிய உதவும் செயலி  ஸ்மார்ட்போன்
    நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 புதிய இன்ஸ்டாகிராம் அம்சங்கள் இன்ஸ்டாகிராம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025