LOADING...
டிஸ்னி உடனான சந்திப்புக்குப் பின் 'சோரா'வை மூடியது ஓபன்ஏஐ: என்ன காரணம்?
'சோரா'வை மூடியது ஓபன்ஏஐ

டிஸ்னி உடனான சந்திப்புக்குப் பின் 'சோரா'வை மூடியது ஓபன்ஏஐ: என்ன காரணம்?

எழுதியவர் Venkatalakshmi V
Mar 25, 2026
09:42 am

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'Sora' வீடியோ உருவாக்கும் தளத்தை மூடுவதாக ஓபன்ஏஐ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டெவலப்பர் தயாரிப்புகள் மற்றும் சாட்ஜிபிடி உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் இனி வீடியோ உருவாக்கும் சேவை கிடைக்காது. பிரபல பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னி, ஓபன்ஏஐ-யில் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்தது. இதன் மூலம் மார்வெல் மற்றும் ஸ்டார் வார்ஸ் கதாபாத்திரங்களை ஏஐ வீடியோக்களில் பயன்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், டிஸ்னி உடனான சந்திப்பு முடிந்த அடுத்த 30 நிமிடங்களில் சோராவை மூடும் முடிவை ஓபன்ஏஐ எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரணம்

ஏன் இந்த முடிவு?

சோரா தளம் மிக அதிகப்படியான கணினித் திறனை எடுத்துக்கொள்வதே இதற்குக் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. "GPU-க்கள் உருகும் அளவிற்கு" அதன் பயன்பாடு இருந்ததாக நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழு தெரிவித்துள்ளது. தற்போது ஆந்த்ரோபிக் போன்ற நிறுவனங்களுடன் நிலவும் கடும் போட்டியை சமாளிக்க, ஓபன்ஏஐ தனது கவனத்தை முழுமையாக Enterprise Products-கள் பக்கம் திருப்பத் திட்டமிட்டுள்ளது.

எதிர்காலத் திட்டம்

புதிய செயலி உருவாக்கும் திட்டம்

இந்த ஆண்டு சுமார் 14 பில்லியன் டாலர் நஷ்டத்தைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படும் ஓபன்ஏஐ, முதலீட்டாளர்களை ஈர்க்க புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்காக சாட்ஜிபிடி, கோடெக்ஸ் மற்றும் அட்லாஸ் பிரவுசர் ஆகியவற்றை இணைத்து ஒரு 'சூப்பர் ஆப்' (Super App) உருவாக்கும் பணியில் சாம் ஆல்ட்மேன் தலைமையிலான குழு இறங்கியுள்ளது. சோரா தளத்தின் ஏபிஐ (API) மற்றும் ஆப் முழுமையாக எப்போது நிறுத்தப்படும் என்பதற்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement