வந்துவிட்டது சோனி வாக்மேன் NW-ZX707 - அம்சங்கள் என்னென்ன?
சோனி நிறுவனத்தின் புதிய கேசட் வாக்மேன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. பல ஆண்டுகளாக இசை பிரியர்களை கவரும் வகையில், வாக்மேன் மாடல் அப்டேட் மற்றும் ஏராள மாற்றங்களை கொண்டு வந்தது. அந்த வகையில், சோனி நிறுவனம் இந்தியாவில் புதிய வாக்மேனான பிளேயர் NW-ZX707 பெயரில் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இவை, ஆடியோ பிரியர்களை மனதில் கொண்ட மிகவும் நேர்த்தியாக டிசைன் செய்யப்பட்டு இருப்பதாக சோனி அறிவித்து இருக்கிறது. சோனி இந்தியா நிறுவனம் புது வாக்மேன் S மாஸ்டர் HX டிஜிட்டல் ஆம்ப் தொழில்நுட்பம் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது. இவை வாக்மேனுக்காகவே உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் Sony Walkman NW-ZX707 விலை விபரங்கள்
இந்த புது சோனி வாக்மேன் 5 இன்ச் டிஸ்ப்ளே, வைபை வசதி, மியூசிக் ஸ்டிரீமிங், டவுன்லோட் வசதி, மெல்லிய டிசைன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 25 மணி நேரத்திற்கு பேட்டரி லைஃப் வழங்குகிறது. மேலும், மேம்பட்ட ஃபைன் டியூன் செய்யப்பட்ட கபேசிட்டர்கள், FTCAP3, சாலிட் ஹை பாலிமர் கபாசிட்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. சோனி வாக்மேன் மாடலில் எட்ஜ் ஏஐ, DSEE அல்டிமேட், டிஜிட்டல் மியூசிக் ஃபைல்களை ரியல் டைமில் அப்ஸ்கேல் செய்யும் வசதி கொண்டுள்ளது. இதன் விலை மட்டுமே ரூ. 69 ஆயிரத்து 990 என நிர்ணயம்செய்யப்பட்டு உள்ளது.