எப்படி இருக்கிறது மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன்?: ரிவ்யூ
சில ஆண்டுகளுக்கு முன்பு தொடக்க நிலை செக்மண்டில் அதிக ஸ்மார்ட்போன் வெளியீடுகள் இருந்தது. ஆனால், இப்போது ரூ.30,000-க்குள்ளான மிட் ரேஞ்சு செக்மண்டிலேயே அதிக போன் வெளியீடுகளை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த போட்டிய நிறைந்த செக்மண்டில் ஒரு போனாக வெளியாகியிருக்கும் மோட்டோரோலா எட்ஜ் 40 மொபைல் எப்படி இருக்கிறது? வசதிகள்: 6.55 இன்ச் pOLED டிஸ்பிளே மீடியாடெக் டைமன்சிட்டி 8020 ப்ராசஸர் 50MP+12MP ரியர் கேமரா: 32MP செல்ஃபி கேமரா 4,400 mAh பேட்டரி 68W ஃபாஸ்ட் சார்ஜிங்: 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதி IP68 ரேட்டிங் 5G வசதி ஆண்ட்ராய்டு 13 விலை: 8 GB ரேம் + 256 GB ஸ்டோரேஜ் - ரூ.29,999
பயன்பாட்டிற்கு எப்படி இருக்கிறது?
மோட்டோரோலா எட்ஜ் 30-யின் அப்டேட்டட் வெர்ஷனாக வெளியாகியிருக்கிறது மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன். ரூ.30,000-குள்ளான மொபைல் செக்மண்டில் மற்ற ஸ்மார்போன்களில் இல்லாத IP68 ரேட்டிங், 144Hz டிஸ்பிளே ஆகியவற்றைக் கொண்டு வெளியாகியிருக்கிறது இந்த எட்ஜ் 40. மோட்டோவின் சாஃப்ட்வேரைப் பற்றி சொல்லவே தேவையில்லை. மிகவும் க்ளீனான ப்ளாட்வேர் இல்லாத சாஃப்ட்வேர். அனைத்து பாக்ஸ்களிலும் டிக் அடித்து சிறந்த ஆல்-ரவுண்டர் அந்தஸ்தைப் பெறுகிறது இந்த மோட்டோ, ஒரே ஒரு வசதியைத் தவிர. இந்த மோட்டோவின் கேமரா பெர்ஃபாமன்ஸ் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. பேட்டரி லைஃபும் கொஞ்சம் குறைவு. மேற்கூறிய இரண்டையும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ள தயாராக இருப்பவர்கள் மற்ற அம்சங்களுக்காக கண்டிப்பாக இந்த எட்ஜ் 40-ஐ வாங்கலாம்.