Microsoft டீம்ஸ்ஸில் புதிய கண்காணிப்பு அம்சம்: இனி நீங்கள் எஸ்கேப் ஆகவே முடியாது!
செய்தி முன்னோட்டம்
கலப்பின பணியாளர் (Hybrid Work) கலாச்சாரம் அதிகரித்து வரும் நிலையில், மைக்ரோசாஃப்ட் தனது புகழ்பெற்ற தகவல் தொடர்பு தளமான மைக்ரோசாஃப்ட் டீம்ஸ்ஸில் (Microsoft Teams) புதிய location கண்காணிப்பு அம்சத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது ஊழியர்கள் எங்கிருந்து பணிபுரிகிறார்கள் என்பதை அவர்களின் மேலதிகாரிக்கு தானாகவே தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம், ரிமோட் முறையில் பணிபுரிவோரை கண்காணிக்கும் ஒரு கருவியாக பார்க்கப்படுவதால், ஊழியர்கள் மத்தியில் இது குறித்த அச்சமும் விவாதமும் எழுந்துள்ளது.
செயல்பாடுகள்
புதிய அம்சத்தின் செயல்பாடுகள்
அலுவலக Wi-Fi மூலம் கண்காணிப்பு: இந்த புதிய அம்சம், ஜி.பி.எஸ் (GPS) தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல், ஊழியர்களின் சாதனம் நிறுவனத்தின் அலுவலக Wi-Fi-உடன் இணையும்போது, அவர்கள் எந்த கட்டிடத்திலிருந்து பணிபுரிகிறார்கள் என்பதை தானாகவே கண்டுபிடித்து, லொகேஷனை புதுப்பிக்கும். மைக்ரோசாஃப்ட் நிறுவனம், இந்த அம்சம் இயல்பாகவே செயலிழக்க (off by default) செய்யப்பட்டிருக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளது. எனினும், நிறுவனத்தின் கணினி நிர்வாகிகளால் (Tenant Admins) மட்டுமே இதைச் செயல்படுத்த முடியும். மேலும், ஊழியர்கள் தாமாக முன்வந்து இந்த அம்சத்தைப் பயன்படுத்த ஒப்புதல் கொடுக்க வேண்டும் (opt-in). இது Windows மற்றும் macOS தளங்களில் கிடைக்கும். இந்த அம்சம் டிசம்பர் 2025 முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமர்சனம்
ஊழியர்கள் மத்தியில் விமர்சனம்
ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்ப விமர்சகர்கள் மத்தியில் இந்த அம்சம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இதனை, வீட்டில் இருந்து பணிபுரியும் ஊழியர்களை நிறுவனங்கள் தீவிரமாகக் கண்காணிப்பதற்கான மற்றொரு 'டிஜிட்டல் சங்கிலி' (Digital Leash) என்று விமர்சிக்கின்றனர். ரிமோட் பணி சூழலில் "அதிக தொழில்நுட்பம், குறைந்த நம்பிக்கை" என்பதற்கு இந்த அம்சம் ஒரு உதாரணமாக உள்ளது என சமூக ஊடகங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றன. ஊழியர்களின் உற்பத்தித் திறனை காட்டிலும், அவர்கள் அலுவலகத்தில் இருக்கிறார்களா என்பதை கண்காணிக்க நிறுவனம் முன்னுரிமை அளிப்பதாக பலர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.