Page Loader
புதிய சுற்று பணிநீக்கத்துக்கு தயாராகும் மெட்டா!
புதிய சுற்று பணிநீக்கத்துக்கு தயாராகும் மெட்டா

புதிய சுற்று பணிநீக்கத்துக்கு தயாராகும் மெட்டா!

எழுதியவர் Prasanna Venkatesh
May 20, 2023
04:12 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 11,000 ஊழியர்களை தங்கள் நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்தது மெட்டா. அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருப்பதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தது. மார்ச் மாதம் வெளியான புதிய பணிநீக்க அறிவிப்பைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 4,000 ஊழியர்களை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்தது. இந்த பணிநீக்கத்தில் அந்நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த ஊழியர்களே பாதிக்கப்பட்டனர். தற்போது புதிய பணிநீக்க அறிவிப்பின் இரண்டாம் சுற்று பணிநீக்கத்திற்கு தயாராகி வருகிறது மெட்டா. அடுத்த வாரம் இந்த இரண்டாம் சுற்றின் கீழ் அந்நிறுவனத்தின் வணிகப் பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படவிருக்கிறார்கள். இந்த சுற்றில் எத்தனை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படவிருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்களை அந்நிறுவனம் வெளியிடவில்லை.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post