வாட்ஸ்அப்பில் பாதுகாப்பான முறையில் சாட் ஹிஸ்டரியைப் பறிமாறிக் கொள்ள புதிய வசதி அறிமுகம்
வாட்ஸ்அப் பயனர்கள் பயன்பெறும் வகையில் புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது மெட்டா. வாட்ஸ்அப் பயனர்கள் இனி தங்களது பழைய ஸ்மார்ட்போனில் இருந்து புதிய ஸ்மார்ட்போனிற்கு நேரடியாக வாட்ஸ்அப் மூலமாகவே சாட் ஹிஸ்டரியை பரிமாறிக் கொள்ள முடியும். QR கோடைக் கொண்டு சாட் வாட்ஸ்அப் செயலியின் மூலமாகவே சாட் ஹிஸ்டரியைப் பரிமாறிக் கொள்ளும் புதிய வசதியைத் தான் தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது மெட்டா. இதற்கு முன்னர், பயனர்கள் சாட் ஹிஸ்டரியை வேறு ஸ்மார்ட்போனுக்கு மாற்ற வேண்டும் என்றால் மூன்றாம் தரப்பு செயலியையோ அல்லது சாட் பேக்கப்பையோ பயன்படுத்தி வேண்டியிருந்தது. மூன்றாம் தரப்பு செயலிகள் மற்றும் சாட் பேக்கப்பை பயன்படுத்தும் போது வாட்ஸ்அப் சாட்டில் பகிரப்பட்டிருக்கும் தகவல்கள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் இருந்து வந்தது.
பாதுகாப்பான முறையில் தகவல் பறிமாற்றம்:
வாட்ஸ்அப் செயலியில் மட்டுமே சாட்கள் என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கும். சாட் பேக்கப்கள் என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்காது. எனவே, பாதுகாப்பான முறையில் புதிய ஸ்மார்ட்போனிற்கு வாட்ஸ்அப் தகவல்களைப் பறிமாறிக் கொள்ள இந்த புதிய வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது மெட்டா. தற்போது, தகவல் பறிமாற்றம் நிகழும் இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஒரே இயங்குதளத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கிறது. அதாவது, ஆண்ட்ராய்டு பயனர்கள் ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களுக்கோ, ஐஓஎஸ் பயனர்கள் ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களுக்கோ சாட் ஹிஸ்டரியை பறிமாறிக் கொள்ள முடியாது. மேலும், இந்த புதிய முறையில் சாட் ஹிஸ்டரியைப் பறிமாறிக் கொள்ள இரண்டு சாதனங்களும் ஒரே வைபை-யில் இணைக்கப்பட்டு, லொகேஷனை ஆன் செய்து வைக்க வேண்டும். சாட் ஹிஸ்டரியைப் பறிமாறிக்கொள்ள, Settings>Chats>Chats Transfer>Scan QR code.