ரெடிட் தளத்திற்குப் செக் வைத்த மெட்டா! ரகசியமாக வெளியான புதிய Forum ஆப் - என்னென்ன ஸ்பெஷல்?
செய்தி முன்னோட்டம்
முன்னணி சமூக ஊடக நிறுவனமான மெட்டா, ரெடிட் (Reddit) தளத்திற்குப் போட்டியாக ஃபோரம் (Forum) என்ற புதிய விவாத செயலியை ஐஓஎஸ் தளத்தில் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்றி ரகசியமாக அறிமுகப்படுத்தியுள்ளது. சமூக ஊடக ஆலோசகர் மாட் நவர்ரா என்பவரால் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த ஆப், தற்போது உலகின் சில குறிப்பிட்ட பிராந்தியங்களில் உள்ள ஆப் ஸ்டோரில் மட்டும் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
செயல்பாடு
ஃபோரம் ஆப் செயல்படும் முறை
பயனர்கள் தங்களின் தற்போதைய ஃபேஸ்புக் கணக்கைப் பயன்படுத்தி இந்த புதிய 'ஃபோரம்' செயலியில் மிக எளிதாக லாகின் செய்ய முடியும். நீங்கள் லாகின் செய்தவுடன், உங்களின் ஃபேஸ்புக் குரூப்புகள், சுயவிவரத் தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் தானாகவே இந்த புதிய ஆப்பிற்கு மாற்றப்பட்டுவிடும். உலகம் முழுவதும் உள்ள பல்வேறு சமூகங்கள், பொழுதுபோக்குகள், பரிந்துரைகள் மற்றும் உதவிக் குழுக்களுடன் பயனர்களை இணைக்கும் வகையில் இந்த ஆப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
தனிநபர் ரகசியம்
ரெடிட் போன்ற முக்கிய அம்சங்கள் மற்றும் தனிநபர் ரகசியம்
இந்த ஆப்பில் பயனர்கள் தங்களின் உண்மையான பெயர்களைப் பயன்படுத்தாமல், புனைப்பெயர்களைப் (Nicknames) பயன்படுத்திப் பதிவுகளை உருவாக்கவும் விவாதங்களில் பங்கேற்கவும் முடியும். ரெடிட் தளத்தைப் போலவே, இந்த அம்சம் பயனர்களுக்கு விவாதங்களின் போது கூடுதல் தனிநபர் ரகசியத்தையும் (Privacy) பாதுகாப்பையும் வழங்குகிறது. ஆப்பின் முதன்மைப் பக்கத்தில் (Main Feed) பயனர்கள் இணைந்துள்ள குழுக்களின் விவாதங்கள் மட்டுமே முன்னிலைப்படுத்திக் காட்டப்படும். இதன் மூலம் பயனர்கள் தாங்கள் ஏற்கனவே பாதியில் நிறுத்திய விவாதங்களை எவ்வித சிரமமும் இன்றி அடுத்த முறை தொடர்ந்து கண்காணிக்க முடியும்.
Ask பட்டன்
மெட்டா ஏஐ மற்றும் 'ஆஸ்க்' (Ask) பட்டன் வசதி
இந்த ஆப்பில் 'ஆஸ்க்' (Ask) என்ற ஒரு சிறப்புப் பொத்தான் வழங்கப்பட்டுள்ளது; இதன் மூலம் பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் பரிந்துரைகள் பல்வேறு குழுக்களில் இருந்து திரட்டப்பட்டு உடனடியாக வழங்கப்படும். மேலும், ஃபேஸ்புக் குழுக்களை நிர்வகிக்கும் அட்மின்களுக்காக (Group Administrators) இதில் மேம்பட்ட ஏஐ (AI-led) கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஏஐ கருவிகள் குழுவிற்குள் நடக்கும் விவாதங்களை முறைப்படுத்தவும், ஆரோக்கியமான உரையாடல்களைப் பராமரிக்கவும் அட்மின்களுக்குப் பெரிதும் உதவி செய்யும்.
தற்போதைய நிலை
தகுதி மற்றும் தற்போதைய நிலை
தற்போதைய நிலையில், இந்த மெட்டா ஃபோரம் ஆப் ஐஓஎஸ் 18 அல்லது அதற்குப் பிந்தைய ஓஎஸ் பதிப்புகளில் இயங்கும் ஆப்பிள் சாதனங்களில் மட்டுமே வேலை செய்யும். ஆப் ஸ்டோரில் இந்தச் செயலிக்கு 13+ வயது வரம்பு (Age Rating) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மெட்டா நிறுவனம் இதன் உலகளாவிய வெளியீடு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், ஆன்லைன் விவாத தளங்களில் ரெடிட்டின் ஆதிக்கத்திற்குப் போட்டியாக மெட்டா களம் இறங்கியுள்ளதை இந்த நடவடிக்கை காட்டுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Meta just shadow dropped a new app called "Forum," it's basically their attempt at making a Reddit clone.
— AlphaFox (@alphafox) May 22, 2026
It pulls Facebook Groups completely out of the main app and moves them into a separate space dedicated just to groups, which in way are similar to X communities. pic.twitter.com/DOBDGogGjf