Loading...
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் 18 வயதுக்குட்பட்டோருக்கு 2 மணி நேர லிமிட்! மெட்டா நிறுவனம் முடிவு
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் சிறுவர்களுக்கு 2 மணி நேர வரம்பு

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் 18 வயதுக்குட்பட்டோருக்கு 2 மணி நேர லிமிட்! மெட்டா நிறுவனம் முடிவு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 29, 2026
07:11 pm

செய்தி முன்னோட்டம்

சிறுவர்களின் மனநலம் மற்றும் தரவுப் பாதுகாப்பு தொடர்பாக எழுந்த வழக்குகளைத் தொடர்ந்து, 52 அமெரிக்க மாநில வழக்கறிஞர்களுடன் மெட்டா நிறுவனம் 18 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தைச் செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, 18 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் தளங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டுவர மெட்டா ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படும் தொகையானது அடுத்த 10 ஆண்டுகளில் சிறுவர்களின் ஆன்லைன் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்படவுள்ளது.

நேரக் கட்டுப்பாடுகள் 

ஆட்டோமேட்டிக் நைட் மோட் மற்றும் பள்ளி நேரக் கட்டுப்பாடுகள்

புதிய கட்டுப்பாடுகளின்படி, நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை சிறுவர்களுக்கான ஆட்டோமேட்டிக் நைட் மோட் அமல்படுத்தப்படும்.

இந்த நேரத்தில் ஃபீட்கள், ஸ்டோரீஸ்கள், ரீல்ஸ்கள் மற்றும் எக்ஸ்ப்ளோர் பக்கங்கள் முற்றிலும் முடக்கப்படும்.

மேலும் காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரையிலான பள்ளி நேரத்தில் முக்கிய அறிவிப்புகள் தவிரப் பிற தேவையற்ற நோட்டிபிகேஷன்கள் அமைதியாக்கப்படும் (Muted).

நேரடிச் செய்திகள் (DMs) மற்றும் கணக்குப் பாதுகாப்புச் செய்திகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

2 மணி நேரம்

2 மணி நேர கட்டுப்பாடும் திரை விழிப்பூட்டல்களும்

சிறுவர்கள் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டு செயலிகளையும் சேர்த்து நாளில் அதிகபட்சமாக 2 மணி நேரம் மட்டுமே பயன்படுத்தக்கூடிய பயன்பாட்டு வரம்பு கொண்டுவரப்படுகிறது.

தொடர்ந்து 15 நிமிடங்கள் செயலியைப் பயன்படுத்தினால் திரையில் விழிப்பூட்டல் தோன்றும்.

மேலும் 60 மற்றும் 90 நிமிடங்களை எட்டும்போது அடுத்தடுத்த பயன்பாட்டு எச்சரிக்கைகள் வழங்கப்படும்.

வீடியோக்கள் தானாகவே இயங்குவதை நிறுத்தும் வசதியும் பெற்றோர்களுக்கும் சிறுவர்களுக்கும் வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

வயது கண்காணிப்பு

லைக்குகள் மறைப்பு மற்றும் ஏஐ மூலம் வயதுக் கண்காணிப்பு

சிறுவர்களின் கணக்குகளில் அவர்கள் பதிவிடும் பதிவுகள் மற்றும் பிறரின் பதிவுகளுக்கான லைக்குகள் மற்றும் ரியாக்ஷன்களின் எண்ணிக்கை இயல்பாகவே மறைக்கப்படும்.

13 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கணக்குகளைக் கண்டறிந்து நீக்குவதற்கும், 13 முதல் 17 வயதுடையவர்களைப் பாதுகாப்பான முறையில் வழிநடத்துவதற்கும் மேம்படுத்தப்பட்ட ஏஐ மாடல்களை மெட்டா பயன்படுத்தவுள்ளது.

இந்த மாற்றங்கள் சிறுவர்களின் ஆரோக்கியமான சமூக ஊடகப் பயன்பாட்டை உறுதிசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT