தீக்காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க செயற்கை தோல்: மருத்துவ ஆய்வு நிறுவனங்கள் முயற்சி
பிரபல பிரெஞ்சு நிறுவனமான உர்கோ, ஒரு வகையான செயற்கை தோலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 'ஸ்கின் கிராஃப்ட்டிங்' எனப்படும், வலி நிறைந்த சிகிச்சைக்கு மாற்றாக, இது இருக்கும் என நிறுவனம் கூறியுள்ளது. தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் எனவும் தெரிவிக்கிறது. அமெரிக்கா டாலர் மதிப்பில் 106 மில்லியன் செலவில், 'ஜெனிசிஸ்' ப்ரொஜெக்ட்டின் கீழ், இப்படி ஒரு திட்டம் செயலாக்கப்பட்டு வருகிறது. 'ஹோலி கிரெயில் ஆஃப் வூண்ட் ட்ரீட்மெண்ட்' என்று பெயரிடப்பட்டுள்ள அந்த திட்டம், ஒரு சாத்தியமான தீர்வைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், அந்த கண்டுபிடிப்பு, 2030 க்குள் தயாராக இருக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
செயற்கை தோல் பற்றிய கூடுதல் விவரங்கள்
வெளிப்புற அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பது மற்றும் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துவது உட்பட தோலின் அனைத்து செயல்பாடுகளையும், மீண்டும் உருவாக்க முடியும் என்று டிஉர்கோவின், மருத்துவப் பிரிவின் தலைவர், குய்ரெக் லு லூஸ் விளக்கினார். மனித சருமத்தில் இருக்கும் அதே நிலைத்தன்மையைப் பிரதிபலிக்க, ஆராய்ச்சியாளர்கள் உயிருள்ள செல்களை முறையாகப் பாதுகாத்துள்ளனர். 1800 களில் இருந்தே Urgo மருத்துவ ஆடைகளை தயாரித்து வருகிறது. "2000 களில் இருந்து, மருத்துவ சிக்கல்களை சரிசெய்யும் பொருட்களில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். மருத்துவ ஆடைகள் அறிவியல் மாற்றத்துடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. உடலில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு தகுந்தாற்போல், அவை செயல்படும்," என்று உர்கோவின் ஆராய்ச்சி இயக்குனர் லாரன்ட் அபெர்ட் கூறினார். மேலும் இந்த திட்டத்தை "மருத்துவத்தில் ஒரு புரட்சி" என்று குறிப்பிடுகிறார்.