மெக்டொனால்டு அலுவலகங்கள் மூடல்! பணிநீக்க அறிவிப்பை வெளியிடுகிறது: அறிக்கை
உலகின் மிகப்பெரிய உணவு நிறுவனமான McDonald இந்த வாரத்தில் அமெரிக்காவில் உள்ள அதன் அனைத்து அலுவலங்களையும் தற்காலிகமாக மூடுவதாகவும், ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய இருப்பதாகவும், Wall Street Journal பத்திரிக்கை அறிவித்துள்ளது. மெக்டொனால்டு நிறுவனம் ஏற்கனவே திங்கள் முதல் புதன் வரை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அமெரிக்க ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருந்தது. இதனால் பணிநீக்கங்கள் தொடர முடியும் என தகவல்கள் வெளியானது. ஆனால் எத்தனை ஊழியர்கள் இதில் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என தெரியவில்லை. மேலும், ஏப்ரல் 3ஆம் தேதி நிறுவனத்தை பற்றி முக்கிய முடிவுகளை எடுக்கப்போவதாக மெக்டொனால்டு மின்னஞ்சலில் அறிவித்து இருந்தது. உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் உயர்ந்து வரும் பணவீக்கத்தை எதிர்கொள்ள நிறுவனங்கள் முயற்சிப்பதால் பணிநீக்கங்கள் அதிகரித்து வருகின்றன.