உங்கள் ஆதார் கார்டு தொலைந்துவிட்டால் முதலில் என்ன செய்யவேண்டும்?
ஆதார் அட்டையானது பல ஆவண சரிபார்ப்புகளுக்கு பயன்படுகிறது. கிட்டத்தட்ட அனைத்து தேவைகளுக்குமே ஆதார் அட்டை தான் பயன்படுகிறது. அப்படி, ஆதார் அட்டை தொலைந்து போனால் பயம் கொள்ளாதீர்கள். உங்கள் ஆதார் PVC கார்டை தொலைத்துவிட்டால் , UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ( https://myaadhaar.uidai.gov.in/ ) ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம் . அதன்பின், 12 இலக்க ஆதார் எண்ணைப் பயன்படுத்தி உங்கள் கணக்கில் உள்நுழைந்து, கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு, 'OTP அனுப்பு' என்பதைக் கிளிக் செய்யவும். myAadhaar டாஷ்போர்டில், 'ஆதார் PVC கார்டை ஆர்டர் செய்' என்பதைத் தேர்ந்தெடுத்து, மக்கள்தொகை விவரங்களை முன்னோட்டமிட்டு, 'அடுத்து' என்பதைக் கிளிக் செய்யவும். ரூ.50 மற்றும் சில நாட்களில் உங்கள் PVC கார்டைப் பெறுவீர்கள்.
ஆதார் கார்டு தொலைந்தவுடன் என்ன செய்யவேண்டும்?
லாக் செய்யலாம் ஆதார் கார்டு தொலைந்துவிட்டால் பதற்றப்படாமல் அதனை முதலில் லாக் செய்யுங்கள். உங்கள் மொபைலில் இருந்து, GETOTP என டைப் செய்து, அதனை தொடர்ந்து உங்கள் ஆதாரின் கடைசி நான்கு இலக்க எண்ணினை பதிவிடவும். இதனை 1947 என்ற எண்ணுக்கு எஸ் எம் எஸ் ஆக அனுப்பவும். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு UIDAIல் இருந்து 6 இலக்க OTP வரும். தொடர்ந்து நீங்கள் மீண்டும் உங்களது மொபைலில் இருந்து, LOCKUID இதனை தொடர்ந்து கடைசி நான்கு இலக்க ஆதார் எண், அதனை தொடர்ந்து நீங்கள் பெற்ற 6 இலக்க OTP-யையும் பதிவிட வேண்டும். இதனை இணையம் மூலமாகவும் லாக் செய்யலாம்.