வந்துவிட்டது, சிறுவர்களுக்கான புதிய லெனோவா டேப் M9
சீன தொழில்நுட்ப நிறுவனமான லெனோவா, டேப் M9 என்று பெயரிடப்பட்டுள்ள, புதிய டேப்லெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இது CES 2023 இல் காட்சிப்படுத்தப்படும் என்றும், அடுத்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தியாவுக்கு எப்போது விற்பனைக்கு வரும் என்று தெரியவில்லை. இந்த டேப், 9.0-இன்ச் டிஸ்ப்ளே, ஹீலியோ ஜி80 சிப்செட், 128ஜிபி வரை மெமரி மற்றும் 13 மணிநேர பேட்டரி ஆயுள் ஆகியவற்றை வழங்குகிறது. இதன் ஆரம்ப விலை அமெரிக்கா டாலர் மதிப்பில், $140 (சுமார் ரூ.11,600) என குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுவர்களை குறி வைத்து, தயாரிக்கப்பட்ட இந்த lenovo Tab M9 , உள்ளமைக்கப்பட்ட கூகிள் கிட்ஸ் ஸ்பேஸ் மற்றும் யூட்யூப் கிட்ஸ் போன்ற வசதிகளுடன் வருகிறது.
லெனோவா டேப் M9 -னின் சிறப்பம்சங்கள்
இது லெனோவா நிறுவனத்தின் Tab M8 மற்றும் Tab M10 வரிசையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தில், ஃபிங்கர்பிரின்ட் ரீடர் இல்லாமல் வருகிறது. பின்புற கேமரா பிரிவில், 8MP ஸ்னாப்பர் மற்றும் செல்ஃபி கேமரா 2MP லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் (1340x800 பிக்சல்கள்) ரெசல்யூஷன் மற்றும் 15:9 விகிதத்துடன் 9.0-இன்ச் எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது Dolby Atmos உடன் கூடிய இரட்டை ஸ்பீக்கர்களை வழங்குகிறது. Tab M9 இல் 4ஜிபி RAM மற்றும் 128ஜிபி சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 2TB வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பகமும் உள்ளது. இந்த சாதனம் Android 12 இல் இயங்குகிறது மற்றும் 5,100mAh பேட்டரி, புளூடூத் 5.1, 4ஜி மற்றும் டைப்-சி போர்ட் ஆகியவை வழங்கப்படுகின்றன.