கூகுள் பிக்சல் 9 வரிசையின் புகைப்படங்கள் வெளியீட்டிற்கு முன்னதாகவே கசிந்தது
கடந்த மாதம், கூகுளின் வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் பிக்சல் 9 ப்ரோவின் புகைப்படங்கள் கசிந்தன. அதே போல, தற்போது இது சார்ந்த கூடுதல் புகைப்படங்கள் கசிந்துள்ளது. பிக்சல் 9 ப்ரோ மட்டுமின்றி பிக்சல் 9 மற்றும் தற்காலிகமாக 'பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல்' என்று பெயரிடப்பட்ட சாதனத்தின் புகைப்படமும் வெளியாகியுள்ளது. கூகுள் இன்னும் இந்த பெயரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இந்த ஆண்டு மூன்று உயர்நிலை ஸ்லாப் பாணி மொபைல்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் சாதனங்கள் முந்தைய மாடல்களின் வாரிசுகள் ஆகும். பிக்சல் 8ஐத் தொடர்ந்து பிக்சல்-9 மற்றும் பிக்சல் 8 ப்ரோவைத் தொடர்ந்து பிக்சல் 9ப்ரோ எக்ஸ்எல். பிக்சல் 9 ப்ரோவின் எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள் எக்ஸ்எல் மாடலைப் போலவே இருக்கும்.
பிக்சல் 9 தொடரின் வடிவமைப்பு மற்றும் கேமரா அம்சங்கள்
வடிவமைப்பைப் பொறுத்தவரை, பிக்சல் 9 மற்றும் பிக்சல் 9 ப்ரோ இரண்டும் ஒரே அளவில் உள்ளன. ஆனால் நிலையான மாடலில் பெரிய பெசல்கள் இருப்பதால் திரை தோற்றத்தில் வேறுபடுகின்றன. பின்புறத்தில் ஒரு புதிய கேமரா அமைப்பு உள்ளது. முந்தைய பிக்சல் ஸ்மார்ட்போன்களில் காணப்பட்ட எட்ஜ்-டு-எட்ஜ் 'வைசர்' தோற்றத்தில் இருந்து மாறுப்படுகிறது. மூன்று மாடல்களும் பிரதான கேமரா மற்றும் அல்ட்ராவைடு லென்ஸைக் கொண்டிருந்தாலும், ப்ரோ மாடல்களில் மட்டும் 5x ஆப்டிகல் ஜூம் செய்வதற்கான கூடுதல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸைக் கொண்டுள்ளது. செய்திகளின் படி, பிக்சல் 9 ப்ரோடோடைப்பில் 12 ஜிபி ரேம் உள்ளது. அதே நேரத்தில் பிக்சல் 9 ப்ரோ மற்றும் ப்ரோ எக்ஸ்எல் இரண்டும் 16 ஜிபி அளவிலான பெரிய நினைவகத்தைக் கொண்டுள்ளது.