LOADING...
இலவச 'AI Classroom' பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் Jio: எப்படி பங்கேற்பது?
இது ஒவ்வொரு கற்பவரையும் AI-க்கு தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது

இலவச 'AI Classroom' பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் Jio: எப்படி பங்கேற்பது?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 09, 2025
09:35 am

செய்தி முன்னோட்டம்

ஜியோ 'AI Classroom - Foundation Course' என்ற இலவச மற்றும் தொடக்கநிலையாளர்களுக்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒவ்வொரு கற்பவரையும் AI-க்கு தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த பாடநெறி 2025 இந்திய மொபைல் காங்கிரஸின் முதல் நாளில் வெளியிடப்பட்டது. இந்த திட்டம் JioPC-ஆல் இயக்கப்படுகிறது. மற்றும், AI-இயக்கப்படும் எதிர்காலத்தை வழிநடத்த மாணவர்களுக்கு அத்தியாவசிய அறிவு, திறன்கள் மற்றும் கருவிகளை வழங்கும் நோக்கத்துடன், Jio நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாடநெறி விவரங்கள்

AI Classroom-ஐ எவ்வாறு அணுகுவது?

AI Classroom என்பது செயற்கை நுண்ணறிவில் கட்டமைக்கப்பட்ட, சான்றளிக்கப்பட்ட மற்றும் இலவச அடிப்படை பாடமாகும். இதை PC, டெஸ்க்டாப் அல்லது மடிக்கணினி வைத்திருக்கும் எவரும் அணுகலாம். இந்த பாடத்திட்டத்தை JioPC மூலம் அவர்களின் Jio செட் டாப் பாக்ஸில் உள்ள தொலைக்காட்சிகளிலும் அணுகலாம். இந்த திட்டம் உற்பத்தித்திறன், கற்றல் மற்றும் creativity துறைகளில் பல்வேறு AI கருவிகளை நேரடியாக வெளிப்படுத்துகிறது.

தொழில்நுட்ப கண்டுபிடிப்பு

JioPC என்றால் என்ன?

JioPC என்பது அடுத்த தலைமுறை AI-தயாரான கணினியாகும், இது தனித்துவமான பணம் செலுத்தும் சந்தா மாதிரியைக் கொண்டுள்ளது. இது எந்தத் திரையையும் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு தேவைகள் இல்லாமல் மேம்பட்ட, பாதுகாப்பான கணினியாக மாற்றுகிறது. இந்த சாதனம் உற்பத்தித்திறன், கற்றல், கல்வி, படைப்பாற்றல் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றில் பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. தனிநபர்களை மேம்படுத்துவதற்கும் AI-இயக்கப்படும் எதிர்காலத்திற்கு அவர்களைத் தயார்படுத்துவதற்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது என்று ஜியோவின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

கற்றல் அணுகுமுறை

பாடநெறி, தியரி அறிவை பிராக்டிகல் பணிகளுடன் இணைக்கிறது

AI Classroom பாடநெறி, AI பற்றிய தியரி அறிவை, நடைமுறை பணிகளுடன்(practical assignments) இணைக்கிறது. இது AI-ஆதரவு பெற்ற கேப்ஸ்டோன் திட்டத்தில் முடிவடைகிறது, பங்கேற்பாளர்கள் உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய திறன்களைப் பெறுவதை உறுதி செய்கிறது. இந்த திட்டம் அடிப்படைகள், படைப்பாற்றல், தகவல் தொடர்பு மற்றும் திட்ட உருவாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய கட்டமைக்கப்பட்ட நான்கு வார கற்றல் பாதையை கொண்டுள்ளது. இது மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்பவர்களுக்கு ஒரே இடத்தில் பரந்த அளவிலான AI கருவிகளுக்கான அணுகலை வழங்குகிறது.

நன்மைகள்

JioPC பயனர்களுக்கான பிரத்யேக நன்மைகள்

AI வகுப்பறையின் துவக்கம், AI கல்விக்கான அணுகலை ஜனநாயகப்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியைக் குறிக்கிறது. JioPC பயனர்கள் மேம்பட்ட AI கருவிகளுக்கான போனஸ் அணுகல், நீட்டிக்கப்பட்ட கற்றல் திட்டம் மற்றும் பாடத்திட்டத்தை முடித்ததற்கான Jio நிறுவனத்திடமிருந்து சான்றிதழ் போன்ற பிரத்யேக நன்மைகளைப் பெறுகிறார்கள்.