இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி திட்டம் - விண்ணப்பிக்கும் முறை
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஆனது பள்ளி மாணவர்களுக்காக "இளம் விஞ்ஞானி" என்ற சிறப்பு முயற்சியை ஏற்பாடு செய்து வருகிறது. பள்ளி மாணவர்களிடம் அறிவியல் மற்றும் விண்வெளி ஆய்வு குறித்த ஆர்வத்தை உருவாக்கும் நோக்கில் இந்த பயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு செயல்முறை விளக்க பயிற்சிகள் நடத்தப்படும். அதுமட்டுமின்றி, இஸ்ரோ விஞ்ஞானிகள் உடன் கலந்துரையாடும் வாய்ப்பும் கிடைக்கும். இந்த பயிற்சிக்கு ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் மூன்று அல்லது நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டு சுமார் 150 மாணவர்கள் அழைக்கப்படுவார்கள். ஸ்ரீஹரி கோட்டாவில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உட்பட இஸ்ரோவின் ஏழு மையங்களில் மே 15 முதல் 26 ஆம் தேதி வரை மாணவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
இளைஞர்களுக்காக இஸ்ரோ வெளியிட்ட திட்டம் - விண்ணப்பிக்கும் முறை இங்கே
திட்டத்திற்கு பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஏப்ரல் 3, 2023 ஆகும். மேலும், முதல் தேர்வுப் பட்டியல் ஏப்ரல் 10ஆம் தேதியும், இரண்டாவது பட்டியல் தேர்வுப் பட்டியலில் இடங்கள் உறுதி செய்யப்படாததன் அடிப்படையில் ஏப்ரல் 20ஆம் தேதியும் வெளியிடப்படும். பள்ளியில் இந்த ஆண்டு (2023) ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ள மாணவர்கள் https: //jigyasa. iirs. gov. in/yuvika என்ற இணையதளம் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்கள் அனைவருக்கும் தேவையான அனைத்து செலவுகளையும் தங்குமிடம், உணவு, பயணச்செலவு உட்பட அனைத்தையும் இஸ்ரோ ஏற்றுக்கொள்ளும். விண்ணப்பிக்க அல்லது ஏதேனும் தகவல்கள் தேவைப்பட்டால் கலிலியோ அறிவியல் கழகத்தை அணுகலாம்.