NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ககன்யான் திட்டம்: இந்தியாவின் மனித விண்வெளித் திட்டத்தின் முதல் சோதனை டிசம்பரில் நடக்கும் என அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ககன்யான் திட்டம்: இந்தியாவின் மனித விண்வெளித் திட்டத்தின் முதல் சோதனை டிசம்பரில் நடக்கும் என அறிவிப்பு
    இஸ்ரோ தலைவர் சோமநாத்

    ககன்யான் திட்டம்: இந்தியாவின் மனித விண்வெளித் திட்டத்தின் முதல் சோதனை டிசம்பரில் நடக்கும் என அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 17, 2024
    03:16 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது லட்சிய திட்டமான ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனை ஓட்டத்தை டிசம்பரில் மேற்கொள்ள திட்டமிட்டுளளது.

    ஸ்ரீஹரிகோட்டாவில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இஸ்ரோ தலைவர் சோமநாத் இதை உறுதிப்படுத்தினார்.

    திட்டத்தின் தற்போதைய நிலை குறித்த புதுப்பிப்பை வழங்கிய அவர், இந்தியாவின் முதல் மனிதர்களை ஏற்றிச் செல்லும் விண்வெளிப் பயணமான ககன்யான் திட்டத்தின் எதிர்காலத் திட்டங்களைக் கோடிட்டுக் காட்டினார்.

    மனித விண்வெளித் திட்டத்தின் குறிப்பிடத்தக்க கூறுகள் ஏற்கனவே சதீஷ் தவான் விண்வெளி மையத்திற்கு வந்துவிட்டதாக சோமநாத் தெரிவித்தார்.

    தற்போது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணியாளர் தொகுதியின் ஒருங்கிணைப்பு நடைபெற்று வருகிறது.

    ககன்யான் திட்டம்

    ககன்யான் திட்டத்தின் முக்கிய முன்னேற்றங்கள்

    ககன்யான் திட்டத்திற்கு இன்றைய நிலை ராக்கெட், எஸ்200 நிலை, எல்1, சி32 நிலை அனைத்தும் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ளதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்தார்.

    க்ரூ எஸ்கேப் ஹார்டுவேர் தயாராக இருப்பதாகவும், முழு வயரிங் மற்றும் சோதனை விரைவில் முடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார். சோமநாத் ககன்யான் பணியை நிறைவு செய்வதற்கும் தொடங்குவதற்கும் ஒரு தற்காலிக காலவரிசையை வழங்கினார்.

    "நவம்பர் மாதத்திற்குள் முழு அமைப்பும் இங்கு வந்துவிடும். சோதனை ஏவுதல் டிசம்பரில் நடக்கும்." என்று அவர் கூறினார்.

    புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய சிறிய செயற்கைக்கோள் ஏவுகணை வாகனத்தின் மூன்றாவது மற்றும் இறுதி வளர்ச்சிப் பயணத்தை வெற்றிகரமாக ஏவியதைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரோ
    இந்தியா
    ககன்யான்
    விண்வெளி

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    இஸ்ரோ

    நிலவின் மண் மற்றும் பாறை மாதிரிகளை பூமிக்கு எடுத்து வர இஸ்ரோவின் புதிய திட்டம் சந்திரன்
    சூரியனை நோக்கிய பயணத்தின் இறுதிக்கட்டத்தில் இஸ்ரோவின் 'ஆதித்யா-L1' விண்கலம் சூரியன்
    'ஒரு இந்தியரை விண்வெளிக்கு அனுப்பத் தயாராக இருக்கிறது அமெரிக்கா': நாசா தலைவர் அறிவிப்பு  இந்தியா
    ஆதித்யா-L1ல் பொருத்தப்பட்டிருக்கும் அறிவியல் உபகரணப் பயன்பாடு குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்ட இஸ்ரோ ஆதித்யா L1

    இந்தியா

    மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் வெற்றி; பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம் பாரிஸ் ஒலிம்பிக்ஸ்
    உலக சிங்க தினம் 2024: அழிவின் விளிம்பில் உள்ள காட்டு ராஜாக்களை மீட்பதற்கான முன்னெடுப்பு சிறப்பு செய்தி
    மாலத்தீவில் இந்தியாவின் யுபிஐ சேவைகள் அறிமுகம்; புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமைச்சர் ஜெய்சங்கர் மாலத்தீவு
    லஞ்சமாக உருளைக் கிழங்கை கேட்ட உத்தரபிரதேச சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் உத்தரப்பிரதேசம்

    ககன்யான்

    இன்று ககன்யான் திட்டத்திற்கான முதல் சோதனை ஓட்டத்தை செயல்படுத்தவிருக்கும் இஸ்ரோ இந்தியா
    ககன்யான் திட்டத்தின் முதல் சோதனை ஓட்டம் வெற்றி இந்தியா
    ககன்யான் விண்வெளி பயணத்துக்குத் தயாராகும் வீரர்கள் பட்டியலை இன்று பிரதமர் வெளியிடுவார் இஸ்ரோ
    4 ககன்யான் திட்ட விண்வெளி வீரர்களின் பெயர்களை அறிவித்தார் பிரதமர் மோடி இஸ்ரோ

    விண்வெளி

    ISSக்கு செல்லும் வழியில், ஹீலியம் கசிவை எதிர்கொண்ட போயிங்கின் ஸ்டார்லைனர் நாசா
    ஐஎஸ்எஸ்க்கு உபநிடதங்கள், பகவத் கீதை, சமோசாக்களை எடுத்துச் சென்ற சுனிதா வில்லியம்ஸ் நாசா
    ISS இல் கண்டறியப்பட்ட 'Spacebug': விண்வெளி வீரர்களுக்கு உடல்நலனுக்கு ஆபத்தா? நாசா
    போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலம் பூமிக்கு திரும்பும் தேதி மேலும் தாமதமாகலாம் நாசா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025