Loading...
இஸ்ரோவின் 'ஸ்மார்ட் பாய்' ஜிஎஸ்எல்வி-எஃப்17 சக்சஸ்; விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது அதிநவீன EOS-05
GSLV-F17 ராக்கெட் வெள்ளிக்கிழமை அதிகாலை 2:55 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

இஸ்ரோவின் 'ஸ்மார்ட் பாய்' ஜிஎஸ்எல்வி-எஃப்17 சக்சஸ்; விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது அதிநவீன EOS-05

எழுதியவர் Venkatalakshmi V
Sep 04, 2026
07:25 am

செய்தி முன்னோட்டம்

கடந்த எட்டு மாதகால இடைவெளிக்குப் பிறகு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ) தனது ஏவுதல் பிரச்சாரத்தை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து ஜிஎஸ்எல்வி-எஃப்17 (GSLV-F17) ராக்கெட் வெள்ளிக்கிழமை அதிகாலை 2:55 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் 19-வது பயணமான இந்த திட்டத்தின் மூலம் EOS-05(GISAT-1A) என்ற அதிநவீன புவி கண்காணிப்புச் செயற்கைக்கோள் துல்லியமாக நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் PSLV-C62 திட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, இஸ்ரோ மேற்கொண்ட இந்த வெற்றி அமைப்புக்கு மிகப்பெரிய புத்துணர்ச்சியை அளித்துள்ளது. 2,367 கிலோ எடைகொண்ட இந்தச் செயற்கைக்கோள், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட அதிமான எடைகொண்ட செயற்கைக்கோள்களில் ஒன்றாகும்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

முக்கியத்துவம்

புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையின் முக்கியத்துவம்

வழக்கமான புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் சில நூறு கிலோமீட்டர் உயரத்தில் இருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் மட்டுமே ஒரு பகுதியைக் கண்காணிக்கும்.

ஆனால் EOS-05 செயற்கைக்கோள் பூமியிலிருந்து சுமார் 36,000 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் செயல்படும்.

இதன் மூலம் இந்திய பகுதியை தொடர்ச்சியாக கண்காணிக்கும் புதிய தொழில்நுட்ப ஆற்றலை இந்தியா பெறுகிறது.

ADVERTISEMENT

பாதுகாப்பு

பேரிடர் மேலாண்மை மற்றும் மூலோபாய பாதுகாப்பு

இந்தப் புதிய புவி கண்காணிப்புச் செயற்கைக்கோள் புயல், வெள்ளப்பெருக்கு, காட்டுத்தீ போன்ற வேகமாக மாறக்கூடிய இயற்கை பேரிடர்களின் போது நிகழ்நேரத் தகவல்களையும் படங்களையும் தொடர்ச்சியாக வழங்கும்.

அதுமட்டுமின்றி எல்லைக் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் ஆய்வு மற்றும் விவசாய மேம்பாடு ஆகியவற்றுக்குத் தேவையான முக்கியமான மூலோபாயத் தரவுகளையும் இது வழங்கும் என இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்எல்வி-எஃப்10 விண்கலம் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டுத் தோல்வியடைந்த GISAT-1 திட்டத்திற்கு மாற்றாக இந்த EOS-05 வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT