வரும் சனிக்கிழமை விண்ணில் பாய்கிறது ஆதித்யா L1: இஸ்ரோ அதிகாரபூர்வ அறிவிப்பு
சந்திரயான் 3இன் வெற்றியை தொடர்ந்து, சூரியனை ஆராய ஆதித்யா L1 என்ற விண்கலத்தை வரும் செப்.2ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் ஏவ இருப்பதாக அறிவித்துள்ளது. "சூரியனை ஆய்வு செய்ய முதல் விண்வெளி அடிப்படையிலான இந்திய ஆய்வகம் திட்டமிடப்பட்டுள்ளது." என்று இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது. செப்டம்பர் 2ஆம் தேதி காலை 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இந்த விண்கலம் PSLV-C57 ராக்கெட்டின் உதவியுடன் விண்ணில் ஏவப்பட்ட இருக்கிறது. இந்த ராக்கெட் ஏவப்படுவதை நேரலையில் காண, மக்கள், இந்த இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. செப்டம்பர் 2ஆம் தேதி ஆதித்யா L1 விண்ணில் பாயும் என்ற செய்தி ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், தற்போது இஸ்ரோ அதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.