ஐபோனில் 5G: தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்கள்
5G வசதியுடன் கூடிய ஆப்பிள் போன்களை, ஆப்பிள் நிறுவனம் 2020 ஆண்டு முதல் விற்க ஆரம்பித்தது. அடுத்தகட்டமாக, சமீபத்தில், ஆப்பிள் நிறுவனம், iOS 16.2 மென்பொருள் புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மற்ற அம்சங்களுடன், 5G இணைப்பை அனுமதிக்கும் வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த 5G அனைத்து ஐபோன்களுக்கும் அல்ல. ஐபோன் 12 மற்றும் அதற்கு பிறகு அறிமுகமான மாடல்களுக்கு மட்டுமே இது பொருந்தும். iOS 16.2 மென்பொருளை புதுப்பிக்கபட்டாலும், 5G அல்லாத ஐபோன்களுக்கு இந்த வசதி பொருந்தாது. இருப்பினும், மற்ற அம்சங்களை இந்த புதுப்பிப்பு அனுமதிக்கும். உங்கள் பகுதியில் 5ஜி சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால் மட்டுமே,உங்களால் 5G உபயோகிக்க முடியும். இந்தியாவில் 5ஜி அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பினும், அனைத்து நகரத்திலும் தற்போது 5G சேவைகள் இல்லை.
ஐபோனில் 5G
உங்கள் மொபைல் சேவை, 5Gயாக மேம்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். தற்போது, ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இருவர் மட்டுமே, இந்தியாவில் 5ஜி சேவைகளை வழங்குகின்றனர். உங்கள் ஐபோனில் 5G சேவைகளைப் பயன்படுத்த, Settings → Mobile Data → Mobile Data options → Voice & Data சென்று 5G -ஐ தேர்வு செய்யவும். 5G தேர்வை, ஐபோன் இரு வசதிகளில் தருகிறது. 5G ஆட்டோ மற்றும் 5Gஆன் என வருகிறது. 5G ஆட்டோ முறையில், ஐபோன் தானாகவே, ஒரு சிறந்த நெட்வொர்க்கைத் தேர்ந்தெடுக்கும். மறுபுறம், 5G ஆன் நாமாகவே நெட்வொர்க்கை தேர்வு செய்துகொள்ளலாம். டூயல் சிம் உபயோகிப்பாளர்கள் வசதிக்காக அறிமுகப்படுத்த பட்டது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.