நோட்ஸூடன் மியூசிக்கை பகிரும் வசதியை அறிமுகப்படுத்தியது இன்ஸ்டாகிராம்
ட்விட்டரைப் போல டெக்ஸ் வடிவில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையிலான நோட்ஸ் என்ற வசதியை கடந்த டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது இன்ஸ்டாகிராம். இந்த வசதியின் மூலம், சின்ன சின்ன வாக்கியங்கள் மற்றும் எமோஜிக்களை டெக்ஸ்டாக நாம் பகிர முடியும். வழக்கமான ஸ்டேட்டஸைப் போல 24 மணி நேரத்தில் தாமாகவே அழிந்து விடும் வகையில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது அந்த டெக்ஸ்டுடன், மியூசிக்கையும் சேர்த்துப் பகிரும் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது இன்ஸ்டாகிராம். சாதாரணமாக நாம் பதிவிடும் புகைப்படங்களுடன், மியூசிக்கை சேர்த்துப் பதிவிடுவதைப் போல, நோட்ஸில் நாம் பகிரும் டெக்ஸ்டுடனும் இனி மியூசிக்கைப் பகிர முடியும். அதிகபட்மாக 30 நொடிகள் வரையிலான மியூசிக்கை நோட்ஸூடன் சேர்த்துப் பகிரும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.