
இன்ஸ்டாகிராம் திடீரென்று வேலை செய்யவில்லை: இன்ஸ்டா வாசிகள் கதறல்
செய்தி முன்னோட்டம்
உலகெங்கிலும் உள்ள பல பயனர்களுக்கு இன்ஸ்டாகிராம் செயலிழந்துள்ளது.
இந்த திடீர் செயலிழப்பை உறுதிப்படுத்த பயனர்கள் ட்விட்டருக்குள் படை எடுத்திருப்பதால், #InstagramDown என்ற ஹாஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கிறது.
தற்போது வரை, இது தொடர்பான எந்த விவரங்களையும் இன்ஸ்டாகிராம் வெளியிடவில்லை.
ஆனால், ட்விட்டர் பதிவுகளின் படி, இன்ஸ்டாகிராமை திறந்தால் "பிழை ஏற்பட்டுவிட்டது" என்ற செய்தி மட்டுமே வருகிறதாம்.
ஜூன் 9 காலை 10:40 மணியளவில் இன்ஸ்டாகிராம் செயலிழக்க தொடங்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ஆனால், இன்ஸ்டாகிராம் செயலிழந்த பிறகும் ஓயாத இன்ஸ்டா வாசிகள் ட்விட்டரில் வந்து குடியேறி உள்ளனர்.
இன்ஸ்டாகிராம் இந்த வருட தொடக்கத்தில் ஏற்கனவே ஒருமுறை செயலிழந்துள்ளது. எனவே, செயலிழப்பு நிரந்தரமானது இல்லை என்று கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
இந்த செயலிழப்பு நிரந்தரமானது இல்லை
#JustIn | Browser-ல் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பயனர்களுக்கு சேவை முடங்கியுள்ளது!#SunNews | #InstagramDown pic.twitter.com/p1YMwqkilr
— Sun News (@sunnewstamil) June 9, 2023