LOADING...
இந்தியாவின் செயற்கைக்கோள்களை பாதுகாக்க பாடி கார்ட் செயற்கைக்கோள்களை உருவாக்க மத்திய அரசு திட்டம்
இந்தியாவின் செயற்கைக்கோள்களை பாதுகாக்க பாடி கார்ட் செயற்கைக்கோள்களை உருவாக்க திட்டம்

இந்தியாவின் செயற்கைக்கோள்களை பாதுகாக்க பாடி கார்ட் செயற்கைக்கோள்களை உருவாக்க மத்திய அரசு திட்டம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 22, 2025
03:04 pm

செய்தி முன்னோட்டம்

விண்வெளியில் செயற்கைக்கோள்களுக்கு அச்சுறுத்தல் அதிகரித்துவரும் நிலையில், அவற்றை பாதுகாப்பதற்கான புதிய உத்தியை இந்தியா உருவாக்கி வருகிறது. சமீபத்தில் ஒரு செயற்கைக்கோள் மற்றொரு செயற்கைக்கோளுடன் நெருங்கி வந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்த திட்டத்தை தீவிரப்படுத்த அரசு தயாராகி வருகிறது. இந்த திட்டத்தின்படி, விண்வெளியில் உள்ள மற்ற விண்கலங்களிலிருந்து வரும் அச்சுறுத்தல்களை அடையாளம் கண்டு, அவற்றை எதிர்கொள்ளும் வகையில் பாடி கார்ட் செயற்கைக்கோள்களை உருவாக்க இந்திய அரசு ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது. 2024 ஆம் ஆண்டின் மத்தியில் நடந்த ஒரு சம்பவத்தில், ஒரு அண்டை நாட்டைச் சேர்ந்த செயற்கைக்கோள், இந்தியாவின் இஸ்ரோ செயற்கைக்கோளுக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கும் குறைவாக நெருக்கமாக வந்தது.

ராணுவ பயன்பாடுகள்

ராணுவ பயன்பாட்டிற்கான செயற்கைக்கோள்களின் பாதுகாப்பு

இஸ்ரோவின் செயற்கைக்கோள் ராணுவ பயன்பாடுகள் கொண்ட, தரைப்பகுதி கண்காணிப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு, விண்வெளி பாதுகாப்பு அவசியத்தை உணர்த்தியுள்ளது. மேலும், மோடி அரசின் இந்த நடவடிக்கை, விண்வெளி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த திட்டத்தில், பல பில்லியன் டாலர் செலவில் 50 புதிய கண்காணிப்பு செயற்கைக்கோள்களை ஏவுவதும் அடங்கும். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சமீபத்திய மோதலின்போது, இஸ்ரோவின் செயற்கைக்கோள் திறன்கள் முக்கியப் பங்காற்றியது. சீனாவைப் போன்ற மேம்பட்ட செயற்கைக்கோள் திட்டங்களைக் கொண்ட போட்டியாளர்களிடமிருந்து இந்தியா பெரும் சவாலை எதிர்கொள்கிறது.

லிடார் தொழில்நுட்பம்

லிடார் தொழில்நுட்பம் மேம்படுத்தல்

இதை எதிர்கொள்ள, லிடார் (LiDAR) போன்ற தொழில்நுட்பங்களை உருவாக்கி, அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறிந்து, விண்கலத்தை திசைதிருப்பும் நடவடிக்கைகளை எடுக்க தனியார் ஸ்டார்ட்அப்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. இது, தேசிய பாதுகாப்பிற்கான ஒரு வலுவான, 24 மணி நேர விண்வெளி கண்காணிப்பு அமைப்பை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.