ITR தாக்கல்: நீங்கள் தவிர்க்க வேண்டிய தவறுகள் என்னென்ன?
வருமான வரி தாக்கல் செய்யும் போது சரியான நேரத்தில் செய்ய வேண்டும், மேலும் தாக்கல் செய்த பின் அதை உறுதி செய்வதும் முக்கியம். இதனிடையே, FY2022-23 (AY2023-24)க்கான ITR-களை ஜூலை 31-க்குள் தாக்கல் செய்ய வேண்டும். இது தற்போதைய காலக்கெடுவாகும். ஆன்லைனில் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யும்போது சில தவறுகள் நேர்கின்றன.. அப்படி தவிர்க்க வேண்டியது என்ன என்பதைப்பற்றி பார்ப்போம். தவறான படிவம் தவறான ITR படிவத்தை பலரும் பயன்படுத்துகிறார்கள். எனவே, ITR படிவத்தை கவனமாக தேர்வு செய்ய வேண்டும். படிவம் 26AS முக்கிய ஆவணமான 26AS உங்கள் வருமானத்தைப் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது. எனவே படிவம் 16ல் உள்ள விவரங்களை, படிவம் 26AS இன் விவரங்களுடன் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
ஐடிஆர் தாக்கல் செய்யும்போது செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன?
வங்கி விவரம் சரியான வங்கிக் கணக்கு விவரங்களை வழங்குவதை உறுதிசெய்யவும். தவறான கணக்கு விவரங்களை கொடுத்தால் பணம் திரும்பப் பெறுவது கடினம் வெளிநாட்டு சொத்துக்கள் வங்கி கணக்கில் வெளிநாட்டு சொத்துக்கள் இருந்தால், அவற்றை உங்கள் ஐடிஆரில் அறிவிப்பதை உறுதிசெய்யவும். அப்படி செய்யத் தவறினால் அபராதம் செலுத்த வேண்டும் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம். சரியான நேரத்தில் ITR வட்டி மற்றும் அபராதத்தை தவிர்க்க சரியான நேரத்தில் ITR ஐ தாக்கல் செய்வது மிகவும் முக்கியம். ITR காலக்கெடு ஜூலை 31 வரை கொடுக்கப்பட்டுள்ளது. கடைசியாக உங்கள் ஐடிஆரைச் சரிபார்க்கும் போது, தவறுகள் ஏதேனும் இருப்பது தெரிந்தால், திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.