ஆபத்தான சாலைகள் குறித்து எச்சரிக்கும் கூகிளின் புதிய செயலி வேஸ்
கூகிள் தனது வேஸ் செயலியில், புதிதாக, ஆபத்தான சாலைகளைப் பற்றி எச்சரிக்கும் புதிய அம்சத்தைச் சேர்த்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த புதுப்பிக்கப்பட்ட செயலியின், பீட்டா வெளியீட்டை, சோதனையோட்டமாக, குறிப்பிட்ட சில நாடுகளுக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி அறிமுகப்படுத்தப்பட்ட நாடுகளில், அந்த செயலியில், பாப்-அப் ஒன்று தோன்றும் எனவும், ஓட்டுனர்கள், அந்த வழித்தடத்தின் அறிக்கைகளைப் பயன்படுத்தி, சில சாலைகளில் உள்ள 'விபத்துகளின் வரலாறு' குறித்து அறியலாம், எனவும் அந்நிறுவனத்தின் அறிக்கை கூறியது. இந்த செயலி, அருகிலுள்ள சாலைகளின் அபாயகரத்தை, அதன் ட்ராபிக் தரவுகளின் அடிப்படையில், பயனர்களுக்கு தெரிவிக்கிறது. வேஸ்-இன் இந்த புதிய பீட்டா பதிப்பைப் பயன்படுத்தும் போது, அருகிலுள்ள அதிக ஆபத்துள்ள சாலைகள் வரைபடத்தில் சிவப்பு நிறத்தில் மேற்கொடிடப்பட்டு காட்டப்படும்.
கூகிள் செயலி
இருப்பினும், பயனர் அடிக்கடி பயணிக்கும் சாலைகளில் இந்த மேற்கோள் இருக்காது என்று செய்தி நிறுவனங்கள் கணிக்கின்றன. மேலும், இந்த அம்சம், வாகன ஓட்டியை சுற்றியுள்ள ஆபத்தான சாலைகளைப் பற்றிய ஒரு எச்சரிக்கை பாப்-அப் அறிவிப்பை மட்டுமே காட்டுகிறது. இது வாகன ஓட்டியை பதட்டமடைய செய்யாமல், அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை அறிவிப்பாக மட்டுமே இருக்கும். இந்த புதுப்பிப்பு, விரைவில் பொது மக்களுக்கு கிடைக்கும் என்று அந்த அறிக்கை மேலும் கூறியது. மேலும், கடந்த ஜூன் மாதத்தில், கூகுள், மேப்ஸிற்கான புதிய அம்சத்தை வெளியிட்டது. அது இப்போது, அமெரிக்காவில் உள்ள ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கு, காற்றின் தரத்தை காண்பிக்கும்.