Page Loader
மனிதனை போல் உருவாகும்  'Apprentice Bard' - விரைவில் கூகுளின் அட்டகாசமான அப்டேட்
chatgpt க்கு போட்டியாக வரும் கூகுளின் 'Apprentice Bard'

மனிதனை போல் உருவாகும் 'Apprentice Bard' - விரைவில் கூகுளின் அட்டகாசமான அப்டேட்

எழுதியவர் Siranjeevi
Feb 02, 2023
01:13 pm

செய்தி முன்னோட்டம்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கூட்டணியில் உருவாகியுள்ள ChatGPT ஆன்லைன் கருவி தற்போது பிரபலமாகியுள்ள நிலையில், இதற்கு போட்டியாக பல செயற்கை நுண்ணறிவு கருவிகள் வர ஆரம்பித்துள்ளன. இதனால் கூகுள், சாட்ஜிபிடிக்கு போட்டியாக, Apprentice Bard என்ற ஏஐ-யை சோதனை செய்து வருகிறது. 'அப்ரெண்டிஸ் பார்ட்' எனப்படும் ChatGPT போன்ற சாட்போட் விரைவில் அறிமுகமாகவுள்ளது. Apprentice Bard ஆனது, எந்த கேள்வி கேட்டாலும் செயற்கை நுண்ணறிவு மூலமாக பதில் சொல்கிறது. ஏதேனும் கட்டுரைத் தலைப்பை இதனிடம் சொன்னால், இணையதள வசதி இல்லாமலேயே இந்த சேவையை பெற முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.

கூகுள்

சாட்ஜிபிடிக்கு போட்டியாக அறிமுகமாக போகும் 'Apprentice Bard' - இதன் அம்சம் என்ன்ன?

ஏனெனில் கூகுள், பிங்க் போன்ற தேடுபொறிகள் நீங்கள் ஒரு வினாவை அனுப்பியதும் பல்வேறு வெப்சைட்டுகளில் இருந்து தகவல்களை உங்களுக்கு பெற்று தரும். சாட்ஜிபிடியை பொறுத்தளவில், தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளுக்கு இன்னும் அப்டேட் ஆகவில்லை. ஆனால், தற்போது கூகுள் புதுப்பிக்கப்பட்ட தேடல் அனுபவத்தில் வேலை செய்து வருகிறது. இதில் உரையாடலில் ஒரு கேள்வியைக் கேட்டு பதிலைப் பெற்றுக் கொள்ளலாம். கூகுள் "சமீப வாரங்களில் அப்ரெண்டிஸ் பார்டின் பதில்கள் மிகவும் மேம்பட்டதாக இருப்பதை ஊழியர்கள் கவனித்துள்ளனர்." எனக் கூறப்படுகிறது. இது LaMDA தொழில்நுட்பத்தால் இயங்குகிறது. இதனால், கூகுள் நிறுவனம் இந்த அப்டேட்டை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.