கூகுள் பிக்சல் டேப்லட் vs ஒன்பிளஸ் பேடு, எது பெஸ்ட்?
செய்தி முன்னோட்டம்
கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கூகுள் மற்றும் ஒன்பிளஸ் ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய முதல் டேப்லட்களை வெளியிட்டன. ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் பேடையும், கூகுள் நிறுவனம் தனது பிக்சல் டேப்லட்டையும் வெளியிட்டது. இந்த இரண்டு டேப்லட்களில் எது பெஸ்ட்?
ஒன்பிளஸ் பேடை டேப்லட்டாக மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால், பிக்சல் டேப்லட்டை ஒரு டேபாக மட்டுமல்லாமல் அதற்கான டாக்குடன் இணைத்து கூகுள் ஹோம் ஹப் போன்ற சாதனமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பிக்சல் டேப்லட்டின் 16:10 அஸ்பெக்ட் ரேஷியோவை விட ஒன்பிளஸ் பேடின் 7:5 அஸ்பெக்ட் ரேஷியே டேப்லட்டின் பயன்பாட்டிற்கு பல்வேறு வகையிலும் உதவியாக இருக்கிறது. முக்கியமாக பல டேப்களை ஒரே நேரத்தில் திறந்துவைத்து வேலை பார்க்க எளிதாக இருக்கும்.
கேட்ஜட்ஸ் ரிவ்யூ
கூகுள் பிக்சல் டேப்லட் vs ஒன்பிளஸ் பேடு:
ப்ராசஸர் என்று வந்துவிட்டால் அதில் கூகுளின் டென்சார் தான் பெஸ்ட். ஒன்பிளஸ் பேடின் மீடியாடெக் டைமன்சிட்டி 9000 ப்ராசஸரை விட கூகுளின் டென்சார் G2 சிறப்பான பெர்ஃபாமன்ஸைக் கொடுக்கிறது.
கூகுள் நிறுவனம் டேப்லட்டை மட்டுமே வெளியிட்டிருக்கிறது, கூடுதலான துணைக்கருவிகள் எதையும் அந்நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால், ஒன்பிளஸ்ஸோ தங்கள் டேப்லட்டுக்கான கீபோர்டு, ஸ்டைலஸ் உள்ளிட்ட துணைக்கருவிகளையும் கூடுதலாக வெளியிட்டிருக்கிறது.
பிக்சல் டேப்லட் முழுவதுமாக சார்ஜ் ஆக 2.40 மணி நேரம் எடுத்துக்கொள்ளும் நிலையில், 67W சார்ஜிங் வசதியுடன் வெறும் 1 மணி நேரத்திற்கும் கொஞ்சம் கூடுதலான நேரத்தில் முழுவதுமாக சார்ஜ் ஆகிவிடுகிறது ஒன்பிளஸ் பேடு.
மேலும், இந்தியாவில் கூகுள் தங்களுடைய டேப்லட்டை வெளியிடவில்லை. ஒன்பிளஸ் மட்டுமே தங்களுடைய டேப்லட்டை ரூ.37,999 விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.