ஆதார் எண்ணைக் பயன்படுத்தி யுபிஐ கணக்கை தொடங்கும் புதிய வசதி.. எப்படி?
செய்தி முன்னோட்டம்
இதுவரை கூகுள் பே செயலியில் டெபிட் கார்டுகளை வைத்து புதிய கணக்குகளை ஆக்டிவேட் செய்யும் வசதியை வழங்கி வந்தது அந்நிறுவனம்.
இனி, ஆதார் எண் கொண்டு யுபிஐ கணக்குகளை ஆக்டிவேட் செய்யவும் புதிய வசதியை பயனர்களுக்கு வழங்கத் தொடங்கியிருக்கிறது கூகுள் பே.
ஆனால், இந்த வசதியைப் பயன்படுத்த நம்முடைய ஆதார் மற்றும் வங்கிக் கணக்கானது ஒரே மொபைல் எண்ணுடன் லிங்க்காகி இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய யுபிஐ பின்னை செட் செய்வதற்கும் இந்த வசதியை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். பேடிஎம்மிலும் யுபிஐ பின்னை செட் செய்ய டெபிட் கார்டு இல்லாமல் ஆதார் எண்ணை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
கூகுள்
எப்படி பயன்படுத்துவது?
புதிய கணக்கை கூகுள் பேயில் இணைப்பதற்கு முன் டெபிட் கார்டு மற்றும் ஆதார் என இரு தேர்வுகள் பயனாளர்களுக்குக் காட்டப்படும். அதில் ஆதாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பின்னர் நமது ஆதார் எண்ணில் முதல் ஆறு எண்களை மட்டும் பதிவிட வேண்டும்.
அதனைத் தொடர்ந்து நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கியை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இதன் பின்பு ஆதாரிலிருந்து ஒரு OTP எண்ணும், வங்கியிலிருந்து ஒரு OTP எண்ணும் நமது மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.
இரண்டையும் அடுத்தடுத்து தோன்றும் பக்கங்களில் பதிவிட வேண்டும்.
அதன் பின்பு நம்முடைய யுபிஐ கணக்கிற்கான பின் எண்ணை இரண்டு முறை பதிவிட்டால் போதும்.
அவ்வளவு தான், ஆதார் எண்ணைக் கொண்டு யுபிஐ கணக்கை தொடங்கும் செயல்முறை முடிந்தது.