NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / AR ஹெட்செட் உருவாக்கும் திட்டத்தை கைவிடும் கூகுள், அடுத்து என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    AR ஹெட்செட் உருவாக்கும் திட்டத்தை கைவிடும் கூகுள், அடுத்து என்ன?
    AR ஹெட்செட்டுக்கான இயங்குதளத்தில் கவனம் செலுத்தவிருக்கும் கூகுள்

    AR ஹெட்செட் உருவாக்கும் திட்டத்தை கைவிடும் கூகுள், அடுத்து என்ன?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 28, 2023
    03:28 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த மார்ச்சில், தங்களுடைய 'கூகுள் கிளாஸ்' திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தது கூகுள். சாதாரண கண் கண்ணாடியைப் போலவே தோற்றம் கொண்ட, மொபைலுடன் இணைந்து செயல்படும் வகையில், ஸ்மார்ட்கிளாஸைப் போல செயல்படக்கூடிய வகையில் கூகுள் கிளாஸை உருவாக்கி வந்தது கூகுள்.

    அதனைத் தொடர்ந்து, ஆப்பிள் மற்றும் மெட்டாவைப் போல AR ஹெட்செட்டில் கூகுள் தங்களது கவனத்தை செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது 'புராஜெக்ட் ஐரிஸ்' என்ற பெயரில் செயல்படுத்தி வந்த AR ஹெட்செட்டை உருவாக்கும் திட்டத்தையும் அந்நிறுவனம் கைவிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

    புராஜெக்ட் ஐரிஸூக்கு தலைமை தாங்கி வந்த கிளே பேவர் மற்றும் முக்கிய பொறியாளர்கள் சிலர் நிறுவனத்திலிருந்து விலகி சில மாதங்கள் கடந்திருக்கும் நிலையில், தற்போது இந்த முடிவை எடுத்திருக்கிறது கூகுள்.

    கூகுள்

    கூகுளின் அடுத்த திட்டம் என்ன? 

    தங்களுடைய AR ஹார்டுவேர் தயாரிப்பை தற்சமயம் மூட்டை கட்டி வைத்திருக்கும் கூகுள், AR ஹெட்செட்களுக்கான மென்பொருள் தயாரிப்பில் கவனம் செலுத்தவிருக்கிறது.

    இந்த ஆண்டுத் தொடக்கத்தில், குவால்காம், சாம்சங் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்கள் இணைந்து புதிய மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்டை உருவாக்கவிருப்பதாக அறிவித்திருந்தார்கள்.

    ஹெட்செட்டுக்கான சிப்பை குவால்காமும், ஹார்டுவேரை சாம்சங்கும், சாஃப்ட்வேரை கூகுளும் வடிவமைக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்காக மறுவடிவமைக்கப்பட்ட ஆண்ட்ராய்டு போன்ற இயங்குதளத்தை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறது கூகுள்.

    அது மட்டுமின்றி, இனி வருங்காலத்தில் உருவாக்கப்படவிருக்கும் AR/VR ஹெட்செட்களும் பயன்படுத்தும் வகையிலான ஹெட்செட்டுக்கான இயங்குதளம் ஒன்றையும் உருவாக்கத் திட்டமிட்டு வருகிறது கூகுள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கூகுள்
    மெட்டா
    ஆப்பிள்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    சென்னையில் போக்குவரத்து அபராதங்களுக்கு புதிய கட்டுப்பாடு: 5 விதிமீறல்களுக்கு மட்டும் அபராதம் சென்னை
    பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு பாகிஸ்தான் அதிகாரியை தொடர்பு கொண்டதாக ஒப்புக்கொண்ட 'ஸ்பை யூடியூபர்' ஜோதி மல்ஹோத்ரா  பஹல்காம்
    வெயிலில் அதிகம் செல்வதால் ஏற்படும் sunburn-ஐ இயற்கையாகவே சரி செய்ய உதவும் கற்றாழை! சரும பராமரிப்பு
    இப்போது நீங்கள் கூகிள் சர்ச்சிலேயே ஆடைகளை ட்ரை செய்து பார்க்கலாம் கூகிள் தேடல்

    கூகுள்

    ட்விட்டர், இன்ஸ்டாகிராமைப் போலவே ஜி-மெயிலிலும் நீலநிற செக்மார்க்... அறிவித்தது கூகுள்! ட்விட்டர்
    பாதுகாப்பான AI பயன்பாடு.. அமெரிக்க அதிபருடன் டெக் நிறுவன பிரதிநிதிகள் சந்திப்பு! செயற்கை நுண்ணறிவு
    தங்களது முதல் ஃபோல்டபிள் போன்.. டீசர் வெளியிட்டது கூகுள்! ஸ்மார்ட்போன்
    AI பெயரில் மால்வேர்களை செலுத்தும் Browser Extension-கள்.. பயனர்களே உஷார்! ஆன்லைன் மோசடி

    மெட்டா

    2022 இல் வழக்கொழிந்து போன சில பிரபலமான கேட்ஜெட்களும், விரைவில் விடைபெற இருப்பவைகளும் தொழில்நுட்பம்
    தொழில்நுட்ப உலகம் 2023: என்னென்ன திருப்பங்கள் ஏற்படும், பகுதி 2 தொழில்நுட்பம்
    ஆயிரக்கணக்கான ஊழியர்கள் நீக்கம்! மெட்டா நிறுவனத்தின் அடுத்த நடவடிக்கை ஆட்டோமொபைல்
    பேஸ்புக் மெசஞ்சரின் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட்டில் பல அம்சங்கள் அறிமுகம்! ஸ்மார்ட்போன்

    ஆப்பிள்

    ஆப்பிள் ஐபோன் மஞ்சள் வேரியண்ட்டிற்கு 12 ஆயிரம் தள்ளுபடி! ஆப்பிள் தயாரிப்புகள்
    இந்தியாவில் முதன் முறையாக ஆப்பிள் ஸ்டோர் திறப்பு - எப்போது தெரியுமா? ஆப்பிள் தயாரிப்புகள்
    சீனாவை விட்டு வெளியேறி இந்தியாவை உற்பத்தி மையமாக தேர்வு செய்யுமா ஆப்பிள்? ஆப்பிள் நிறுவனம்
    இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் 2வது ஸ்டோர் திறப்பு - 22 நிறுவனங்களுக்கு தடை!  ஆப்பிள் நிறுவனம்

    தொழில்நுட்பம்

    47 லட்சம் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப் நிறுவனம் - காரணம் என்ன?  வாட்ஸ்அப்
    மே 03-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்
    ஒரே நாளில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்  தங்கம் வெள்ளி விலை
    3 நாட்கள் விமான சேவையை ரத்து செய்த கோ பர்ஸ்ட் - காரணம் என்ன?  விமான சேவைகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025