Paytm மூலம் கரண்ட் பில் கட்டுகிறீர்களா? உங்களுக்கு ஒரு நற்செய்தி!
Paytm செயலி, டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு நாடு முழுவதும் பலரால் உபயோகிக்கப்படுகிறது.அந்த செயலியில் மாதாந்திர மொபைல் ரிச்சார்ஜ் முதல் மின் கட்டணம் செலுத்தும் வசதி என பல சேவைகள் உள்ளன. இந்நிலையில், பயனர்களை கவரும் விதமாக Paytm பிஜிலி டேஸ்-ஐ அறிவித்துள்ளது அந்நிறுவனம். அதன்படி, ஒவ்வொரு மாதமும் 10-15 தேதிக்குள் மின்கட்டணத்தை செலுத்தும் வடிக்கையாளர்களுக்கு, 100 சதவீதம் கேஷ்பேக் மற்றும் கூடுதல் வெகுமதிகளை வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளது. குறிப்பிடப்பட்ட 5 நாட்களில், ஒவ்வொரு நாளும் குறைந்தது 50 பயனர்களுக்கு 100 சதவீதம் கேஷ்பேக் மற்றும் ரூ.2,000 வரை வழங்குகிறது. கூடுதலாக, பயனர்களுக்கு ஷாப்பிங் தள்ளுபடி வவுச்சர்களும் தரவுள்ளது.
Paytm வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி!
பைடம் செயலியை பயன்படுத்தி முதல் முறையாக மின்சார கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, ரூ.200 வரை கேஷ்பேக் கிடைக்கும் எனவும் அறிவித்துள்ளது. இந்த கேஷ்பேக் சலுகையைப் பெற, கட்டணம் செலுத்துவதற்கு முன் 'ELECNEW200' என்ற குறியீட்டைப் பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. Paytm வாடிக்கையாளர்கள் தங்கள் பில்களை செலுத்த பல கட்டண வழிமுறைகளை வழங்குகிறது. Paytm UPI, Paytm வாலெட், கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள் மற்றும் நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்தலாம். Paytm-இன் இந்த வசதி மூலம், நாடு முழுவதும் உள்ள 70 மின்சார வாரியங்களுக்கு கட்டணம் செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.