
இந்தியாவில் கேமிங் மீது மாறி வரும் மனநிலை, புதிய ஆய்வு முடிவு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் கேமிங் மற்றும் இ-ஸ்போர்ட்ஸ் என்பது வெறும் பொழுதுபோக்கு என்பதைக் கடந்து ஒரு பணம் ஈட்டும் தொழிற் பிரிவாக மாறி வருகிறது. இந்தியாவில் கேமிங் மற்றும் இ-ஸ்போர்ட்ஸ் மீது மாறி வரும் பார்வை குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியிருக்கிறது HP.
15 முதல் நிலை நகரங்கள் மற்றும் 15 இரண்டாம் நிலை நகரங்களில் உள்ள 3,500 நபர்களிடம் கேமிங் மற்றும் இ-ஸ்போர்ட்ஸ் குறித்த கருத்துக்களைப் பெற்று அதனடிப்படையில் முடிவுகளை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
அந்த ஆய்வின் முடிவில், இந்திய கேமர்கள் ஆண்டுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வருவாய் ஈட்டு வருவது தெரிய வந்திருக்கிறது. மேலும், பாதிக்கும் மேற்பட்ட இந்திய கேமர்கள், அதனை பணம் ஈட்டும் வழியாகக் கருதுவதும் தெரிய வந்திருக்கிறது.
கேமிங்
இந்தியாவில் கேமிங் மற்றும் இ-ஸ்போர்ட்ஸ் மீதான பார்வை:
இந்திய கேமர்கள், கேம்கள் மூலம் மட்டுமின்றி, பிராண்டு ஸ்பான்சர்ஷிப்கள், கேமிங் போட்டித் தொடர்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் போன்ற இதர வகைகளிலும் வருவாய் ஈட்டி வருகின்றனர்.
முக்கியமாக கேமிங் மீது ஆர்வம் இருக்கும் குழந்தைகளின் ஆர்வம் மீதான பெற்றோர்களின் மனநிலை மாறியிருக்கிறது. 42% பேர் கேமிங்கை ஒரு பொழுதுபோக்காக அங்கீகரித்திருக்கும் நிலையில், 40% பேரின் மனநிலை இன்னும் நேர்மறையாக மாறியிருக்கிறது.
எனினும், .சில பெற்றோர்களுக்கு மட்டும் கேமிங்கை ஒரு கரியர் தேர்வாகத் தங்களது குழந்தைகள் தேர்வு செய்வதில் குழப்பம் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
கேமர்களில் 67% பேர் கேமிங்கிற்காக தனிப்பட்ட கேமிங் லேப்டாப்களுக்கு செலவழிக்க விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். ரூ.1 லட்சத்திற்கு மேலும் கூட கேமிங் சாதனங்களுக்காக செலவழிக்க அவர்கள் தயாராக இருப்பது தெரிய வந்திருக்கிறது.