எலன் மஸ்க் ட்விட்டரில் மறுசீரமைப்பு பணிகளை துவங்கியுள்ளார்
முதற்கட்டமாக செயலற்ற கணக்குகளை நீக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது. இதன் மூலமாக பல பயனர் பெயர்கள் உபயோகத்திற்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எலன் மஸ்க் ட்விட்டரை மேம்படுத்த எடுக்கப்பட்ட புதிய நடைமுறைகளில் இதுவும் அடங்கும். ஏற்கனவே போலி/ஸ்பேம் கணக்குகளை நீக்க நடவடிக்கை எடுக்க போவதாக மஸ்க் அறிவித்து இருந்தார். இன்நடவடிக்கை மூலம் ட்விட்டரின் மொத்த பயனர் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது. எனினும் மாத பயனர் மற்றும் தினசரி பயனர் எண்ணைக்கைகளே தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது காலாண்டு வருவாயின் கணக்கில் எடுத்து கொள்ளும். அதனால் ட்விட்டரின் மதிப்பு குறைய வாய்ப்பு இல்லை என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இறந்தவர்களின் கணக்குகள் என்னவாகும்?
2019 ஆம் ஆண்டில், செயலற்ற கணக்குகளை நீக்குவது தொடர்பாக ட்விட்டர் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டது. அப்போது, இறந்தவர்களின் கணக்கு குறித்து கேள்வி எழுப்பப்பட்டதனால் அந்நடவடிக்கை இடைநிறுத்தகம் செய்யப்பட்டது. மஸ்கின் இந்த அறிவிப்பிலும் இறந்தவர்கள் கணக்குகள் பற்றி எதுவும் கூறப்படவில்லை. இதுபற்றி மஸ்க், "எந்த கணக்க்குகளில் பல ஆண்டுகளாக எந்த ஒரு புகுபதிவோ, புதிய ட்வீட்டோ இல்லையோ,அவை செயல்பாடற்ற கணக்காக அறியப்படுகிறது" என்று கூறினார். செயலாற்ற கணக்குகளை கண்டறிய ஒரு புதிய செயலியை அறிமுக படுத்த போவதாக மஸ்க் தெரிவித்து உள்ளார். இதன் மூலம் பயனாளர்கள் தங்கள் கணக்கின் நிலை பற்றியும், அது நீக்கப்பட்டோ, முடக்க பட்டிருந்தாலோ, மேல் முறையீடு செய்யும் வசதியினையும் அந்த செயலி வழங்கும் எனவும் தெரிவிக்க பட்டு இருக்கிறது.